ஜனாதிபதியாக பணியாற்ற வாய்ப்பளித்ததற்கு நன்றி: ராம்நாத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ”ஜனாதிபதியாக பணியாற்ற வாய்ப்பு அளித்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

latest tamil news

பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

latest tamil news
latest tamil news

லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா பேசும் போது, ராம்நாத் மக்களின் ஜனாதிபதியாக திகழ்ந்தார். சமூகத்தில் பின் தங்கிய மக்களுக்காக பாடுபட்டவர். பெண்களின் முன்னேற்றத்தில் ராம்நாத் பங்களிப்பு அளப்பறியது என்றார்.

latest tamil news

இதன் பின்னர் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: 5 ஆண்டுகளுக்கு முன்பு பார்லிமென்ட் மைய மண்டபத்தில் ஜனாதிபதியாக பதவியேற்றேன். அனைத்து எம்.பி.,க்களுக்கும் எனது இதயத்தில் சிறப்பான இடம் உண்டு. எனது பணிக்காலம் முழுவதும் நினைவில் இருக்கும். ஜனாதிபதியாக பணியாற்ற வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எம்.பி.,க்களுடன் பணியாற்றியது மறக்க முடியாதது. ஜனாதிபதியாக எனது பங்களிப்பை சிறப்பாக வழங்கி உள்ளேன். ஆதரவு அளித்த பிரதமர் மற்றும் எம்.பி.,க்கள் அனைவருக்கும் நன்றி. அம்பேத்கரின் கனவை நனவாக்க முயற்சி செய்தேன். கோவிட்டை கட்டுப்படுத்தியதற்காக இந்தியாவை அனைத்து நாடுகளும் புகழ்கின்றன. இவ்வாறு ராம்நாத் கோவிந்த் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.