ஜூலை 29ல் திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழா

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம் . நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதி ராஜா , பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 18 ஆம் தேதி படம் வெளியாக உள்ளது . சமீபத்தில் இப்படத்தில் இருந்து தனுஷ் எழுதி பாடியிருந்த இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களுக்கிடையே வரவேற்பை பெற்றது . இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் பிரமாண்ட இசைவெளியீட்டு விழா வருகின்ற ஜூலை 29ம் தேதி சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் நடைபெற இருக்கிறது . இந்த நிகழ்ச்சியில் தனுஷ் உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய அனைவரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள் .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.