தமிழ் மக்களை கெட்டவார்த்தைகளால் திட்டும் பெட்ரோல் நிலைய உரிமையாளர் (video)


மட்டக்களப்பு நகரத்தின் மத்தியிலுள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் பொதுமக்களை கெட்டவார்த்தைகளால் திட்டுவது தொடர்பான ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

குறிப்பிட்ட இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் தொடர்பான பல முறைப்பாடுகள் ஏற்கனவே அங்குள்ள மக்களால் எமக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்ததாலும்,  இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதைத் தொடர்ந்தும், உண்மையில் அங்கு என்ன நடைபெறுகின்றது என்பது பற்றி அப்பிரதேசவாசிகளிடம் வினவினோம்.

செல்வராஜன் என்று அழைக்கப்படுகின்ற இந்த நபர் பசில் ராஜபக்சவின் நெருங்கிய நன்பர் என்றும், மட்டக்களப்பின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர் என்றும் கூறும் பிரதேசவாசிகள், இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு நகரில் இவரது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மாத்திரமே எரிபொருட்கள் வினியோகம் செய்யப்பட்டுவருவதால், இவரது அட்காசம் தாங்கமுடியவில்லை என்று கூறுகின்றார்கள்.

எரிபொருள் நிரப்புவதற்காக வரிசையில் நிற்கும் பொதுமக்களை கேலி செய்வது, அசிங்கமாகத் திட்டுவது, அகங்காரமாகப் பேசுவது, தனக்கு நெருங்கியவர்களுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்குவது, காவற்துறையைக் கொண்டு மிரட்டுவது என்று, தனக்குள்ள அரசியல் செல்வாக்கைப் பாவித்து பலவிதமான அடாவடித்தனங்களைச் செய்துவருவதாக இவர் மீது பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றார்கள்.

பசில் பதவி விலகியதைத் தொடர்ந்து கொஞ்சம் அடக்கிவாசித்த இவர், ராஜபக்சக்களின் செல்வாக்கு ஓங்கியதைத் தொடர்ந்து மீண்டும் தனது அடாவடித்தனங்களை ஆரம்பித்துவிட்டதாகக் குற்றம சுமத்துகின்றார்கள் பொதுமக்கள்.

வரிசையில் நாட்கணக்கில் பொதுமக்கள் காத்துக்கொண்டிருக்க, தனக்கு நெருக்கமானவர்களுக்கு அவர் எரிபொருள் வழங்கியதை பொதுமக்கள் சுட்டிக்காண்பித்தபோது, அவர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டும் வீடியோதான் தற்பொழுது வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

எரிபொருள் தட்டுப்பாடு என்பது இன்றைக்கு ஒரு தேசிய பிரச்சனை. அதனை தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின்படி கையாழுவது ஒரு சமூகவிரோதச் செயல்.

செல்வராசா மாத்திரமல்ல – இதுபோன்று மக்களின் பிரச்சனைகளை தமது தனிப்பட்ட நலனுக்காகப் பயன்படுத்துகின்ற அனைவரும் இதனைப் புரிந்துகொண்டு செயற்படுவது அவசியம். 

Gallery

Gallery

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.