புத்தகம், எழுதுகோலுடன் கள்ளக்குறிச்சி மாணவி உடல் நல்லடக்கம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய புத்தகம் மற்றும் எழுதுகோலுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடுமையான போலீஸ் பாதுகாப்புடன் மாணவியின் இறுதி அஞ்சலி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியின் விடுதியில் பிளஸ் 2 மாணவி ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக சர்ச்சை நிலவுகிறது. மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தொடர் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

கடந்த 17-ஆம் தேதி பள்ளி வளாகத்தில் பெரும் கலவரம் வெடித்தது. வன்முறைக் கும்பல் பள்ளி மற்றும் அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்து, அடித்து நொறுக்கியது.

இந்த விவகாரம் தொடர்பாக சுமார் 300 பேரை போலீஸார் கைது செய்தனர். மாணவி இறப்பு குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், 14 நாட்களுக்குப் பிறகு மாணவியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று (சனிக்கிழமை) இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.

மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி மாவட்டம் வேப்பூர் பெரிய நெசலூர் கிராம இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாணவியை அடக்கம் செய்யும்போது, அவர் பயன்படுத்திய புத்தகம் மற்றும் எழுதுகோலை உடன் வைத்து நல்லடக்கம் செய்தனர்.

இதில் தொழிலாளர் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம் புவனகிரி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மாணவியின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, உயிரிழந்த மாணவிக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் இருக்க பாதுகாப்பாக காவல் துறையினர் ஈடுபட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.