குஜராத் மாநிலம் வல்சட் மாவட்டம் பெந்தா கிராமத்தில் போதிய பால வசதி இல்லாததால், இடுப்பில் டியூப் மற்றும் மரக்கட்டைகளை கட்டிக் கொண்டு அபாயகரமான முறையில் சிறுவர்கள் ஆற்றைக் கடந்து பள்ளிக்கு செல்கின்றனர்.
மழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது 14 கிலோ மீட்டர் தூரம் ஊரைச் சுற்றிச் செல்ல வேண்டி உள்ளதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.