மும்பை: மும்பை மகாலட்சுமி கோவிலுக்கு தமிழக பக்தர் , ரூ.10 கோடி மதிப்பிலான தங்க தகடை கோபுரத்திற்கு காணிக்கையாக வழங்கவுள்ளார். கோவையை சேர்ந்தவர் பெரியசாமி. கடந்த 2008 ல் மும்பை தாக்குதலின்போது வெளி நாடு செல்ல முடியாமல் இங்கு சில நாட்கள் தங்கி இருந்தார். இந்நேரத்தில் மகாலட்சுமி கோவிலுக்கு சென்று சில வேண்டுதலை வைத்தார். ஒமனுக்கு பத்திரமாக செல்ல வேண்டும் என்ற வேண்டுதல் நிறைவேறியது. தற்போது அவர் பல கோடிக்கணக்கிலான தொழில் செய்து வருகிறார். இதனையடுத்து இந்தியா வந்த அவர் கோவில் நிர்வாகத்திடம் கோபுரத்திற்கு தங்க தகடு செய்து தர தன்னை அனுமதிக்குமாறு கேட்டார். கோவில் ஒப்புதல் கிடைத்ததால் ரூ. 10 கோடி செலவில் கோவில் கோபுரத்திற்கு தங்க தகடு செய்து கொடுக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்து வருகிறார். இத்தகவலை கோவில் சேர்மன் ராமநாத் ஷா கூறியுள்ளார்.
மும்பை: மும்பை மகாலட்சுமி கோவிலுக்கு தமிழக பக்தர் , ரூ.10 கோடி மதிப்பிலான தங்க தகடை கோபுரத்திற்கு காணிக்கையாக வழங்கவுள்ளார். கோவையை சேர்ந்தவர் பெரியசாமி. கடந்த 2008 ல் மும்பை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்