ரஷ்யப் படைகளை எதிர்கொள்ள உக்ரைனுக்கு மேலும் நூறு டிரோன்களையும் பீரங்கித் தடுப்பு ஆயுதங்களையும் பிரிட்டன் அனுப்பி வைத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிகள், பேட்டரி ராடார் எதிர்ப்பு சாதனங்கள், 50 ஆயிரம் தோட்டாக்கள் ஆகியவற்றுடன் நூறு டிரோன்களும் கப்பல் மூலமாக உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
1600 பீரங்கித் தடுப்பு சாதனங்களும், 6900 பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் அனுப்பி வைக்கப்படும் என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுவரை 15 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாகவும் 45 ஆயிரம் ரஷ்ய படையினர் காயம் அடைந்திருப்பதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது