மேற்கு லண்டனிலுள்ள இறுதிச்சடங்கு மையம் ஒன்றில் நுழைந்த பொலிசார், அங்கு கண்ட காட்சியால் அதிர்ச்சியடைந்த நிலையில், அந்த இறுதிச்சடங்கு மையத்தை நடத்திவந்த நபரைக் கைது செய்தனர்.
காரணம், அந்த இறுதிச்சடங்கு மையத்தில் நான்கு முதியவர்களின் உடல்கள், தரையில் மரப்பலகை ஒன்றின்மீது கிடத்தப்பட்டிருந்திருக்கின்றன.
அந்த அறை குளிரூட்டப்படாததால், அந்த உடல்கள் அழுகி, அவற்றில் புழுக்கள் உருவாகிவிட்டிருக்கின்றன.
தற்போது அந்த உடல்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அந்த இறுதிச்சடங்கு மையத்தில் உரிமையாளரான 50 வயதுள்ள ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலை நாடுகளில் இறந்தவர்களின் உடல்களை மரியாதையில்லாமல் நடத்துவது சட்டப்படி குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
Credit: google maps