பொதுவாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இளைஞர்கள் தான் தொடங்குவார்கள் என்றும் இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை தொடங்கி வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.
ஆனால் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்குவதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார் 79 வயதான முதியவர் ஒருவர்.
இவர் ஏற்கனவே இரண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்கி நடத்தி வரும் நிலையில் தற்போது மூன்றாவது ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் எவ்வாறு செயல்படனும்.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோவ பாருங்க!
79 வயது தொழில்நுட்ப வல்லுனர்
வயது வெறும் எண் என்பதை நிரூபிக்கும் வகையில், 79 வயதான இந்திய தொழில்நுட்ப வல்லுநரான அசோக் சூட்டா தனது உழைப்பின் வேகத்தை குறைக்கும் எண்ணத்தில் இல்லை. இந்தியாவின் தொழில்நுட்பத் துறையில் பல வருடங்கள் பணிபுரிந்து, மூன்று முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தலைமை தாங்கி, அவற்றில் இரண்டை ஐபிஓ மூலம் ஏற்கனவே பொது மக்களுக்கு எடுத்து சென்ற சாதனைக்கு சொந்தக்காரர் தான் இந்த அசோக் சூட்டா.
79 வயதில் ஸ்டார்ட் அப் நிறுவனம்
79 வயதான அவர் தனது ‘ஹேப்பிஸ்ட் ஹெல்த்’ என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை கடந்த வாரம் தொடங்கினார். இது ஒரு உலகளாவிய சுகாதார மற்றும் ஆரோக்கிய அறிவு நிறுவனமாகும். ஆழ்ந்த ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கிய அறிவை வழங்குவதை நோக்கமாக இந்நிறுவனம் கொண்டுள்ளது. அடுத்த 6-7 ஆண்டுகளில் இந்நிறுவனம் ஐபிஓவுக்கு செல்லும் என்று கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் உள்ள 91 ஊழியர்களில் மருத்துவர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் மற்றும் முன்னாள் பத்திரிகையாளர்கள் உள்ளனர்.
நிதியுதவி
‘ஹேப்பிஸ்ட் ஹெல்த்’ ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கான நிதியுதவியை பொருத்த வரையில், தனது மற்றும் தனது குடும்பத்தின் நிதியை முழுமையாக கொண்டு இயங்க இருப்பதாக அசோக் சூட்டா கூறினார். விளம்பரங்கள் மற்றும் நிகழ்வுகள் மூலம் வருமானம் கிடைக்கும் என்று கூறியுள்ள அவர், வெளி மூலதனம் வருவதை விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
வாரன் பப்பெட் உத்வேகம்
ஏற்கனவே இரண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை நடத்தி வரும் அசோக் சூட்டா, இந்த ஆண்டு நவம்பரில் அவருக்கு 80 வயதாகும் போது மூன்றாவது ஸ்டார்ட்அப் நிறுவனமான ஹேப்பிஸ்ட் ஹெல்த் ஒரு ஆக்டோஜெனரியன் நிறுவனத்தை கொண்டிருப்பார். வாரன் பப்பெட் அவர்கள் தான் தனக்கு உத்வேகத்தை கொடுத்தது என்றும், உடல்நலம் மற்றும் நல்வாழ்வு குறித்த அவரது முழுமையான பார்வையை அடிப்படையாக கொண்டது இந்த ‘ஹேப்பிஸ்ட் ஹெல்த்’ ஸ்டார்ட்அப் நிறுவனம் என்றும் அசோக் சூட்டா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
விப்ரோ
1984 முதல் 1999 வரை விப்ரோ லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிந்த அசோக் சூட்டா அதன் பிறகு ஐடி சேவை நிறுவனமான மைண்ட்ட்ரீ லிமிடெட் உடன் இணைந்தார். இந்நிறுவனத்திற்காக கடந்த 2007ஆம் ஆண்டு ஐபிஓ கொண்டு வந்தார். பின்னர் அவர் டிஜிட்டல் சேவைகளை மையமாக கொண்ட அவுட்சோர்ஸர் ஹேப்பிஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தை நிறுவினார். 2011ஆம் ஆண்டு அதன் ஐபிஓவை பட்டியலிட்டார்.
’ஹேப்பிஸ்ட் ஹெல்த்’
அசோக் சூட்டாவின் ‘ஹேப்பிஸ்ட் ஹெல்த்’ ஸ்டார்ட் அப் நிறுவனம் மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய நடைமுறைகளை இணைக்கும் சிகிச்சையை மக்களுக்கு அறிமுகம் செய்கிறது. மேலும் இதுவரை கண்டுபிடிக்க கடினமாக இருந்த சுகாதார தகவல்களை வாடிக்கையாளர்கள் அணுகுவதற்கு உதவுகிறது. இந்த புதிய முயற்சியான ஹேப்பிஸ்ட் ஹெல்த், நவீன மருத்துவம் மற்றும் ஆராய்ச்சியை ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், யோகா மற்றும் தியானம் போன்ற மென்மையான சிகிச்சைகள் மூலம் இணைக்கும் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.
79 year old Indian Techie launches His Third Startup Happiest Health
79 year old Indian Techie launches His Third Startup Happiest Health | வயது வெறும் எண் தான்… 79 வயதில் 3வது ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கி சாதனை!