வீட்டைச் சுற்றி பாம்புகள்… சமாளிக்கத் திணறும் கனேடியருக்கு வனத்துறை வழங்கியுள்ள வித்தியாசமான ஆலோசனை


கனடாவில் புதிதாக வீடு ஒன்றை வாங்கிய கனேடியர் ஒருவர், தினமும் ஐந்தாறு பாம்புகளை சந்திக்கவேண்டியிருப்பதால், அவற்றை சமாளிக்கத் திணறிவருகிறார்.

ரொரன்றோவிலுள்ள Humber நதியோரமாக அழகான வீடு ஒன்றை வாங்கினார் Adam Liboiron. அவரது குடும்பம் அங்கு குடியேறும்போது, அந்த வீடு தனக்கே உரிய இயற்கை சுற்றுச்சூழலைக் கொண்டது என்று அவருக்கு கூறப்பட்டபோது, அதன் பொருள் அவருக்கு விளங்கவில்லை.

பிறகு கோடைக்காலம் வந்தபோதுதான், அந்த இயற்கைச் சுற்றுச்சூழல் என்றால் என்ன என்பது அவருக்குப் புரிந்தது.

ஆம், தினமும் ஐந்தாறு பாம்புகள் Adam வீட்டின் தோட்டம், பின்புறம், கூரை, வீட்டோரம் வளரும் கொடிகள் என எல்லா இடங்களிலும் வலம்வரத்துவங்கின.

வீட்டைச் சுற்றி பாம்புகள்... சமாளிக்கத் திணறும் கனேடியருக்கு வனத்துறை வழங்கியுள்ள வித்தியாசமான ஆலோசனை | Different Advice Given By Forest Department

Michael Charles Cole/CBC

பாம்புகளைக் கொல்லும் எண்ணம் எதுவும் இல்லாமல், அவற்றை பிடித்து பாதுகாப்பாக நதியோரம் கொண்டு விடும் திட்டத்தில் பாம்புகளைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் Adam. ஆனால், அவர் தங்களைக் கொல்வதற்காக பிடிக்கவில்லை, வேறு இடத்தில் கொண்டு விடப்போகிறார் என்பது பாம்புகளுக்குப் புரியுமா என்ன? அவை அவற்றின் வழக்கப்படியே தாக்கத் துவங்கியுள்ளன.

பாம்புகளை அங்கிருந்து அகற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார் Adam.

வீட்டைச் சுற்றி பாம்புகள்... சமாளிக்கத் திணறும் கனேடியருக்கு வனத்துறை வழங்கியுள்ள வித்தியாசமான ஆலோசனை | Different Advice Given By Forest Department

Submitted by Adam Liboiron

ஆனால், பாம்புகளை வீட்டிலிருந்து பிடித்துக் கொண்டுபோய் வேறிடத்தில் விடுவது பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாகாது என்கிறார் வன உயிரியலாளரான Nathalie Karvonen.

சுற்றுச்சூழலையே முற்றிலும் மாற்றி, அதாவது, மரங்களை வெட்டி, நதியை வறண்டுபோகச் செய்து, இயற்கையாக கிடைக்கும் உணவுப்பொருட்களை அகற்றினால் மட்டுமே பாம்புகள் அங்கிருந்து செல்லும் என்கிறார் அவர்.

அப்படியானால் Adamஉடைய பிரச்சினைக்கு என்னதான் தீர்வு?

பேசாமல் அவர் தனது புதிய நண்பர்களுடன் தன் வீட்டை பகிர்ந்துகொள்வதுதான் ஒரே வழி என்கிறார் Nathalie.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.