வெளிநாட்டில் ஐஐடி வளாகம் அமைக்க திட்டம் … எந்தெந்த நாடுகளாக இருக்கலாம்?

ஐஐடியில் படிக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு இந்திய மாணவரின் கனவாக உள்ளது என்பதும் ஐஐடியில் படித்த மாணவர்கள் உலகின் பல பகுதிகளில் பல முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஐடியில் படித்து ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துவிட்டால் வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாட்டிலும் ஐஐடி வளாகங்களை அமைக்க திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஃபசல் பீமா யோஜனா திட்டம் மூலம் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட லாபம்..!

வெளிநாட்டில் ஐஐடி

வெளிநாட்டில் ஐஐடி

இந்திய தொழில்நுட்ப நிறுவனம் என்று கூறப்படும் ஐஐடியின் வளாகங்களை வெளிநாட்டில் அமைக்க பல வருடங்களாக திட்டமிடப்பட்டு வருகிறது. இதுகுறித்த பரிந்துரைகளும் அரசுக்கு வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஜமைக்கா நாடு தங்கள் நாட்டில் ஐஐடி வளாகத்தை தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இரண்டு நாடுகள்

இரண்டு நாடுகள்

முதல் கட்டமாக குறைந்தது இரண்டு நாடுகளில் ஐஐடி வளாகங்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஒன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இன்னொன்று தான்சானியா. இந்த நாடுகளில் ஐஐடி பயிற்சி நிறுவனங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பரிந்துரை
 

பரிந்துரை

ஐஐடி கவுன்சிலின் நிலைக்குழு தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையிலான 16 பேர் கொண்ட குழு சமீபத்தில் அறிக்கை ஒன்றை அரசிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் ஐஐடிக்கு தேவையான பல்வேறு அம்சங்கள் குறித்து இருந்தது என்பதும் அதில் ஒன்றுதான் வெளிநாட்டில் ஐஐடி வளாகங்களை திட்டமிட வேண்டும் என்ற பரிந்துரை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பணச்சுமை

பணச்சுமை

வெளிநாட்டில் ஐஐடியை நிறுவுவதற்கு தேவையான வழிவகை செய்யப்படும் என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்தியாவுக்கு அது ஒரு பண சுமையாக இருக்கக்கூடாது என்றும் கணிசமான முதலீடு தரும் நாடுகளில் ஐஐடியை அமைக்கலாம் என்பதே மத்திய அரசின் எண்ணமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.

குழு அமைப்பு

குழு அமைப்பு

2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏழு ஐஐடி நிர்வாகிகள், பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குநர் மற்றும் டெல்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த குழு ஐஐடி உள்பட உயர்கல்வி நிறுவனங்களின் வளாகத்தை வெளிநாட்டில் திறப்பதற்கான வரைவு கட்டமைப்பை முன்னெடுக்கும் என்று கூறப்பட்டது.

வெளியுறவு அமைச்சகம்

வெளியுறவு அமைச்சகம்

ஒரு நாட்டின் அரசோடு இணைந்தோ அல்லது வெளிநாட்டில் உள்ள புகழ்பெற்ற கல்லூரியுடன் இணைந்தோ வெளிநாடுகளில் ஐஐடியை அமைக்கலாம் என்றும், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் வெளியுறவு அமைச்சகம் இந்த முறையை எளிதாக்கும் என்றும் கூறப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

IIT-like offshore campus plan picks pace

IIT-like offshore campus plan picks pace | வெளிநாட்டில் ஐஐடி வளாகம் அமைக்க திட்டம் … எந்தெந்த நாடுகளாக இருக்கலாம்?

Story first published: Saturday, July 23, 2022, 15:42 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.