வோக்ஸ்வாகன் சிஇஓ ஹெர்பர்ட் டைஸ் திடீர் ராஜினாமா.. இதுதான் காரணம்..?

உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக விளங்கும் வோக்ஸ்வாகன் டெஸ்லா நிறுவனத்திற்கு இணையாக எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் வேகம் காட்டி வரும் வேளையில், இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் பணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஒருபக்கம் ஐரோப்பிய மத்திய வங்கி 11 வருடத்திற்குப் பின்பும் வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில், அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரச் சந்தையில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்படும் நிலை உள்ளது. இந்த நிலை கட்டாயம் அந்நாட்டின் ஆட்டோமொபைல் துறையைக் கட்டாயம் பாதிக்கும்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் சிஇஓ ஹெர்பர்ட் டைஸ் பதவி விலகியது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இவருடைய பதவி விலகல்-க்கு என்ன காரணம்..?!

வோடபோன் ஐடியா-வின் புதிய சிஇஓ அக்ஷயா மூந்த்ரா.. ரவீந்தர் தக்கர்-க்கு என்ன ஆச்சு..!

வோக்ஸ்வாகன்

வோக்ஸ்வாகன்

வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் சிஇஓ-வான ஹெர்பர்ட் டைஸ் தலைமை நிர்வாகி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜெர்மனி-யை தலைமையிடமாகக் கொண்டு உலகளவில் மிக முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் வோக்ஸ்வாகன் நிறுவனத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட உள்ளது.

ஹெர்பர்ட் டைஸ்

ஹெர்பர்ட் டைஸ்

ஹெர்பர்ட் டைஸ் தான் பதவி விலகும் விஷயத்தை வெள்ளிக்கிழமை தெரிவித்த நிலையில் வோக்ஸ்வாகன் நிர்வாகம் செப்டம்பர் 1 தேதியை அவருடைய கடைசி வேலைநாளாக அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து வோக்ஸ்வாகன் சிஇஓ-வாக ஹெர்பர்ட் டைஸ் பதவியில் ஆலிவர் ப்ளூம் பதவியேற்க உள்ளார்.

மின்மயமாக்கல் உத்தி
 

மின்மயமாக்கல் உத்தி

போக்ஸ்வேகன் சிஇஓவாக ஹெர்பர்ட் டைஸ்-ன் நான்கு வருட பணி காலத்தின் போது பல சந்தர்ப்பங்களில் இவருடை எதிர்காலம் இந்நிறுவனத்தில் சந்தேகத்திற்குரியதாகவே இருந்தது. இதில் முக்கியமாகக் கடந்த ஆண்டு அவரது மின்மயமாக்கல் உத்தி மற்றும் மேலாண்மை குறித்து நிறுவனத்தின் சக்திவாய்ந்த பணிக்குழுவுடன் மோதல் ஏற்பட்டது.

உற்பத்தி மற்றும் விற்பனை

உற்பத்தி மற்றும் விற்பனை

எலக்ட்ரிக் கார் உற்பத்தி மற்றும் விற்பனையில் டெஸ்லா நிறுவனத்தை முந்த வேண்டும் எனத் திட்டமிட்டு போக்ஸ்வேகன் இயங்கி வேளையிலும், போக்ஸ்வேகன் கீழ் இருக்கும் Porsche ஸ்போர்ட்ஸ் பிராண்டை ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ள நிலையில் ஹெர்பர்ட் டைஸ் பதவி விலகியுள்ளார்.

லின்கிடுஇன் பதிவு

லின்கிடுஇன் பதிவு

ஹெர்பர்ட் டைஸ் தனது லின்கிடுஇன் கணக்கில் 2022 ஆம் ஆண்டின் முதல் பாதி மிகவும் கடனமாக இருந்தது. கோடைக்காலத்திற்குத் தேவையான பிரேக் இது என்று தனது பதவியை ராஜினாமா செய்த பின்பு அறிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Volkswagen’s Herbert Diess to step down as CEO; New CEO Will be Oliver Blume

Volkswagen’s Herbert Diess to step down as CEO; New CEO Will be Oliver Blume வோக்ஸ்வாகன் சிஇஓ ஹெர்பர்ட் டைஸ் திடீர் ராஜினாமா.. இதுதான் காரணம்..?

Story first published: Saturday, July 23, 2022, 17:08 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.