ஸ்ரீமதி உடல் ஒப்படைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடற்கூராய்வு ஆய்வில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் மீண்டும் ஆய்வு செய்யும் வகையில் புதைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக மாணவியின் உடல் தகனம் செய்யப்பட இருந்தது. 11 நாள்களுக்கு பின்னர் மாணவியின் உடலை பார்த்ததும் அவரது பெற்றோர் கதறிஅழுதனர்.
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 63ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் லிட்டர் ரூ.102.63 எனவும், டீசல் ரூ.94.24 எனவும் விற்பனையாகிவருகிறது.
புதுடெல்லி ரயில் நிலையத்தில் 30 வயதான பெண்ணை, ரயில்வே மின் ஊழியர் ஒருவர் சக தொழிலாளிகளுடன் இணைந்து கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, ரயில்வே தொழிலாளிகள் 4 பேரை கைது செய்தனர். இது குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 21,411 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 67 பேர் உயிரிழந்துள்ளனர். 1,50,100 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதுவரை 4 கோடியே 31 லட்சத்து 92 ஆயிரத்து 379 பேர் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 5 லட்சத்து 25 ஆயிரத்து 997 ஆக உள்ளது. தினந்தோறும் பாதிப்பு விகிதம் 4.46 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடலுக்கு உறவினர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் கூடி அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
முன்னதாக ஸ்ரீமதி உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் ஊர்தி விபத்தில் சிக்கியது. மாணவியின் சொந்தக் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.