ரஷ்யா-உக்ரைன் போர்: போருக்கு மத்தியில், உக்ரைனிடம் தேங்கிக் கிடக்கும் தானியங்களை ஏற்றுமதி செய்யும் நோக்கில் உக்ரைனும் ரஷ்யாவும் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா இந்த ஒப்பந்தத்தை வரவேற்றார், ஆனால், ரஷ்யா மீது நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்துள்ள அவர், எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதாக கூறினார். உக்ரைன் மற்றும் ரஷ்யா தானியங்கள் ஏற்றுமதி தொடர்பாக துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகளுடனான முக்கிய ஒப்பந்தம் நிறைவேறிய பிறகு, உக்ரைனிடம் உள்ள தானிய இருப்பு பற்றி, அந்நாட்டு அதிபர் Volodymyr Zelensky வெள்ளிக்கிழமை (2022 ஜூலை 22) அறிவித்தார்.
உக்ரைனில் சுமார் பத்து மில்லியன் டாலர் மதிப்புள்ள தானியங்கள் விற்பனைக்கு இருப்பதாக அறிவித்தார். கருங்கடல் வழியாக உக்ரைன் செய்து வந்த தானிய ஏற்றுமதி, போரினால் தடைபட்டதால், உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்பட்டது. இந்த சிக்கலை தீர்க்கும் நோக்கத்தில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் படிக்க | சீன அடிப்படையிலான இஸ்லாமியர்களாக இருப்பது எப்படி: முஸ்லிம்களின் கேள்வி
தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்க வகை செய்யும் இந்த ஒப்பந்தத்தில் உக்ரைன், ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகள் கையெழுத்திட்டன. துருக்கி, இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் முடிந்த பிறகு பேசிய உக்ரைன் அதிபர், ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் தாக்குதலை எதிர்த்து நிற்கும் சக்தி உக்ரைனுக்கு உண்டு என்பதை இந்த உடன்பாடு காட்டுவதாக தெரிவித்தார். ஐ.நா ஆதரவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டு விளைச்சலான தானியங்களில் சுமார் 20 மில்லியன் டன்கள் ஏற்றுமதி செய்யப்படும் என்று ஜெலென்ஸ்கி மேலும் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க | Russia Ukraine Crisis: போர்க்களத்தில் மலரும் தானிய ஏற்றுமதி ஒப்பந்தம்
தினசரி இரவு நாட்டு மக்கலுக்கு வீடியோ உரையாற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, உக்ரைனின் கருங்கடல் வழியிலான தானிய ஏற்றுமதியைத் தடுக்கவும், உலகளாவிய உணவு நெருக்கடியைத் தணிக்கவும் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஒரு தானிய ஒப்பந்தத்திற்கு உத்தரவாதம் அளிக்க ஐ.நா. பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறினார்.
“ரஷ்யா ஆத்திரமூட்டல்களில் ஈடுபடலாம், உக்ரைன் மற்றும் சர்வதேச முயற்சிகளை இழிவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபடலாம். ஆனால் நாங்கள் ஐக்கிய நாடுகள் சபையை நம்புகிறோம். இப்போது ஒப்பந்தத்திற்கு உத்தரவாதம் அளிப்பது அவர்களின் பொறுப்பு” என்று உக்ரைன் அதிபர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | சீன அடிப்படையிலான இஸ்லாமியர்களாக இருப்பது எப்படி: முஸ்லிம்களின் கேள்வி
ரஷ்யா மீது நம்பிக்கை இல்லை
உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் இந்த ஒப்பந்தத்தை வரவேற்ற போதிலும், ரஷ்யா மீது நம்பிக்கை இல்லாததால் எச்சரிக்கையாக இருப்பதாக கூறினார்.மேலும், இந்த ஒப்பந்தம் மட்டற்ற மகிழ்ச்சியை கொடுத்துவிடவில்லை. ரஷ்யாவின் செயல்பாடுகளை எச்சரிக்கையாகவே கவனிக்க வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.
“உணவுப் பொருட்களின் விலைகள் அதிகமாக இருப்பதால், இந்த ஒப்பந்தம் வேலை செய்யும், கப்பல்கள் மூலம் உலகச் சந்தைகளுக்கு தானியங்கள் கொண்டு செல்லப்படும், தானியங்களின் விலை குறையும், மக்களுக்கு உண்ண உணவு கிடைக்கும். ஆனால், ரஷ்யா மீது நம்பிக்கை இல்லாததால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது” என்று குலேபா மேலும் கூறினார்.
மேலும் படிக்க | ரஷ்யாவுக்கு ட்ரோன்களை வழங்க ஈரான் திட்டமிட்டுள்ளதா: அமெரிக்கா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ