வெளிநாடு செல்லும் பலரும் தங்களது ஊர் போல இங்கு உணவு கிடைக்கவில்லையே என ஏங்கிப்போவார்கள். அதிலும் சைவ உணவு உண்பவர்கள் என்றால் மேற்கத்திய நாடுகளில் பெரும் உணவு போராட்டத்தையே எதிர்கொள்வார்கள்.
அப்படி அமெரிக்கா சென்று அங்கு தனது ஊர் உணவுக்காக ஏங்கி, அதையே ஒரு தொழிலாகச் செய்து இன்று அமெரிக்காவின் மிகப் பெரிய வர்த்தக 50 மளிகைக் கடைகளை கொண்ட சாம்ராஜ்யத்தையே உருவாக்கியுள்ளார்கள் இந்த பட்டேல் சகோதரர்கள்.
யார் இந்த பட்டேல் பிரதர்ஸ்? அமெரிக்காவில் எப்படி வர்த்தக சாம்ராஜ்யத்தைத் தொடங்கினார்கள் என இங்கு தொடர்ந்து பார்க்கலாம்.
சீனா-வின் ரியல் எஸ்டேட் வீழ்ச்சி.. உலக நாடுகளுக்கு எச்சரிக்கை மணி..!
அமெரிக்கப் பயணம்
குஜராத்தில் 1969-ம் ஆண்டு பொறியியல் படிப்பை முடித்து, அமெரிக்காவுக்கு எம்பிஏ படிக்க செல்கிறார் மஃபத் பட்டேல். அங்கு சென்ற அவருக்கு இந்திய உணவு கிடைக்காமல் அதன் ஏக்கத்தில் தவிக்கிறார். அப்போது 1971-ம் ஆண்டு நாம் ஏன் இந்தியர்களுக்கான ஒரு மளிகை கடையைத் திறக்கக் கூடாது என முடிவு செய்கிறார்.
ஆரம்பம்
அதற்காகத் தனது தம்பி துளசி பட்டேலை அமெரிக்கா அழைத்துச் சென்று சிறிய அளவில் மசாலா பொருட்களை விற்க தொடங்குகிறார். பின்னர் 1974-ம் ஆண்டு அது ஒரு சிறிய சூப்பர் மார்க்கெட்டாக உருவாகிறது. இந்தியாவில் அமெரிக்கா செல்லும் பலருக்கான தாய் வீடு போல இவரது வீடும் கடையும் மாறுகிறது.
ஸ்வாட்
நாம் இங்கு அமெரிக்கக் குளிர்பானங்கள், சாக்லேட், சிப்ஸ் என இங்கு சாப்பிட்டுக்கொண்டு இருக்கையில் பட்டேல் சகோதரர்கள், அம்ரிக்காஇல் இந்திய நொறுக்குத் தீனிகளை, சமோசா, முறுக்கு, கச்சோரி போன்றவற்றை பேக் செய்து ஸ்வாட் என்ற பிராண்ட் ப்யரில் 1991-ம் ஆண்டு விற்க தொடங்குகிறார்கள்.
ராஜா புட்ஸ்
அது நல்ல பயன் வழங்க ராஜா ஃபுட்ஸ் என்ற பெயரில் பாலக் பன்னீர் மசாலா, சிக்கன் டிக்கா மசாலா, சன்னா மசாலா போன்ற பொருட்களை பேக் செய்து விற்க ஆரம்பிக்கிறார்கள். அமெரிக்க சென்ற இளைஞர்கள் மத்தியில் இந்த பிராண்டு பிரபலமாகி அமெரிக்க சென்ற இந்தியர்களின் தாய் வீடாக இவர்களது கடைகள் இப்போது உள்ளன.
மதிப்பு
இப்போது பட்டேல் பிரதர்ஸ் மதிப்பு 140 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. மளிகை, உணவு பொருட்கள் மட்டுமல்லாமல் விமான சுற்றுலா, துணிக்கடை, கைவினைப் பொருட்கள், ஓட்டல் என பல்வேறு வணிகங்களைச் செய்து வருகிறார்கள்.
கிளைகள்
பட்டேல் பிரதர்ஸ் இப்போது அமெரிக்கா முழுவதும் 50 இடங்களில் பிராஞ்சிஸ் முறையில் தங்களை கிளையை நடத்தி வருகிறது. இந்தியர்கள் மட்டுமல்லாமல் பிற நாட்டவரையும் கவரும் நோக்கில் இவர்களது வணிகம் இன்று அமெரிக்காவில் தவிர்க முடியாத சாராஜ்யமாக உருவாகியுள்ளது.
இந்தியாவில் பட்டேல் பிரதர்ஸ்
குஜராத் பூகம்பத்திற்குப் பிறகு, படேல் சகோதரர்கள் அகமதாபாத்தில் சாம்வேதனா நிறுவனத்தை நிறுவியுள்ளனர். இதன் மூலம் குட்ச் நகரில் 160 வீடுகள், ஒரு பள்ளி, ஒரு மருத்துவ மையம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. (இந்தக் குடியிருப்பு சிகாகோ டவுன்ஷிப் என்று அழைக்கப்படுகிறது) மேலும் இந்த நிறுவனமானது அகமதாபாத்தின் எல்ஜி மருத்துவமனையில் முதல் தீக்காயக் கவனிப்புச் சிகிச்சை மையத்தைத் திறந்துள்ளது மற்றும் காந்திநகரில் உள்ள காதி சர்வ் வித்தியாலயாவிற்கு சுமார் ரூபாய் 2 கோடிகளை நன்கொடையாக அளித்துள்ளது.
Story Of Americas Largest Indian’s Lovable Grocery Store Chain Patel Brothers
அமெரிக்காவில் திரும்பும் இடமெல்லாம் ‘படேல் பிரதர்ஸ்’.. யார் இவர்கள்? |Story Of Americas Largest Indian’s Lovable Grocery Store Chain Patel Brothers