“இந்தியாவைப் போல சுதந்திரமான நீதித்துறை உலகில் வேறெங்கும் இல்லை!" – மத்திய சட்ட அமைச்சர்

மறைந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.பி.சின்ஹா நினைவு சொற்பொழிவு நேற்று நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா கலந்துகொண்டார். அப்போது பேசிய என்.வி.ரமணா, “ஊடகங்களால் பரப்பப்படும் பாரபட்சமான கருத்துகள் மக்களைப் பாதிப்பதுடன், ஜனநாயகத்தையும் பலவீனப்படுத்துகின்றன. இதுபோன்ற செயல்பாடுகளால், நீதி வழங்குவதும் மோசமாகப் பாதிக்கப்படுகிறது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா

உங்கள் பொறுப்பை மீறுவதன் மூலம், நீங்கள் நமது ஜனநாயகத்தை இரண்டு படிகள் பின்னோக்கி எடுத்துச் செல்கிறீர்கள்” என ஊடகங்கள் குறித்துப் பேசியிருந்தார்.

என்.வி.ரமணாவிடமிருந்து இத்தகைய கருத்து வெளிவந்திருக்கும் நிலையில், “இந்தியாவைப் போல ஒரு சுதந்திரமான நீதித்துறை உலகிலேயே வேறெங்கும் இல்லை” என மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்திருக்கிறார்.

மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு

என்.வி.ரமணாவின் கருத்து குறித்துப் பேசிய கிரண் ரிஜிஜு, “இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் நிலவும் சூழ்நிலையின்படி அது ரமணாவின் அவதானிப்பு. அப்படி யாரேனும் உணர்ந்தால் இதைப் பற்றி பொதுக் களத்தில் விவாதிக்கலாம். இப்போதைக்கு அவர் கூறியது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. மேலும், இந்திய நீதிபதிகள் மற்றும் நீதித்துறை முற்றிலும் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருப்பதைப் போல உலகில் வேறெங்கும் எந்த நீதிபதியும் அல்லது நீதித்துறையும் சுதந்திரமாக இல்லை என்பதை என்னால் தெளிவாகக் கூற முடியும்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.