உக்ரைன் ராணுவ வீரர்களுடன் போரிஸ் ஜான்சன் ராணுவ பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
பிரிட்டன் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ஆம் ஆண்டு பதவியேற்றார். போரிஸ் பதவி யேற்றது முதலே பல்வேறு சர்ச்சைகள் அவரை சுற்ற தொடங்கின. இதில், கரோனா விதிமுறைகளை மீறி பிறந்த நாள் கொண்டாடினார் என்ற குற்றச்சாட்டு சொந்தக் கட்சிக்குள்ளயே எழுப்பப்பட்டது. இதற்காக போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்.
எனினும், அவரை சுற்றிய சர்ச்சைகள் அடங்கவில்லை. ரிஷி சுனக், சஜித் ஜாவித் போன்ற எம்.பிக்கள் போரிஸ் ஜான்சன் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்தனர். இதையடுத்து, போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனை தொடர்ந்து அடுத்த பிரதமரை தேர்தெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதுவரை இடைக்கால பிரதமராக போரிஸ் ஜான்சன் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரிட்டன் ராணுவத்தின் உதவியுடன் போரிஸ் ஜான்சன் உக்ரைன் ராணுவ வீரர்களுடன் பயிற்சி பெறும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
இப்பயிற்சியில் போரிஸ் ஜான்சன், நவீன ஆயுதங்களை கையாளுதல், குண்டுகளை ஏறிவது போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டார்.இது தொடர்பான புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளது.