கலிபோனியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு காட்டுத்தீ விரைவாகப் பரவி வருவதை அடுத்தே அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக கலிபோனிய நிர்வாகம் அறிவித்துள்ளது. 12 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி காட்டுத் தீயினால் தீக்கிரையாகியுள்ளது.
மேற்கத்திய நாடுகளில் கடந்த சில தினங்களாக அதிக வெப்பம் நிலவுகிறது. இதனால் வீதி சமிக்ஞை விளக்குகளும் விமான நிலைய ஓடுபாதைகளும் உருகியுள்ளன.
பொதுவாக அமெரிக்காவில் ஜூலை மாதத்திற்கு பின் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஏற்படும் காட்டுத் தீ குறைந்தது ஒரு மாதமாவது காட்டு பகுதிகளில் பரவும். சமயத்தில் மக்கள் வசிக்கும் இடத்திற்கு மிக அருகில் இந்த காட்டுத் தீ ஏற்படுவதும் வழக்கம்.
ஆனால் இந்த முறை, இதுவரை இல்லாத அளவிற்கு மிக மோசமான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேற்கு பகுதி முழுக்க மிக மோசமாக காட்டுத் தீ காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கு 90க்கும் அதிகமான இடங்களில் தனி தனியாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தினமும் 90 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மொத்தமாக 600 இடங்களில் காட்டு தீ ஏற்பட்டுள்ளது. காட்டு பகுதிகள் மட்டுமின்றி மக்கள் வசிக்கும் இடங்களிலும் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக 20 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு சேதம் அடைந்து இருக்கலாம். அங்கு 600 கட்டிடங்கள், 120 வீடுகள் இருந்துள்ளது . அதேபோல் ஒரீகான் பகுதியில் 2 லட்சம் ஏக்கர் நிலம் எரிந்துள்ளது. வாஷிங்டனில் 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு எரிந்துள்ளது. இதன் காரணமாக பல்லாயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர் .