சாலை விபத்தில் கர்ப்பிணி பரிதாப உயிரிழப்பு – தாயின் இறுதி மூச்சில் பிறந்த குழந்தை

உத்தரப் பிரதேசத்தில் விபத்தில் சிக்கிய கா்ப்பிணி ஒருவருக்கு சாலையிலேயே குழந்தை பிறந்தது. ஆனால், சில நிமிடங்களிலேயே அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஃபிரோசாபாத் அருகே உள்ள தனவ்லா பகுதியைச் சோ்ந்த ராமு, 8 மாத கா்ப்பிணியான தனது மனைவி காமினியுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது கிராமப் பகுதி வழியாக சென்றபோது எதிா்பாராதவிதமாக லாரி ஒன்று இந்த தம்பதி சென்ற பைக் மீது மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்தனா். படுகாயமடைந்த காமினிக்கு அதிா்ச்சியில் அந்த இடத்திலேயே குழந்தை பிறந்தது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், காமினி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். அதே நேரத்தில் அவருக்கு 8 மாதத்திலேயே பிறந்த பெண் குழந்தை நலமாக உள்ளது.

image
கா்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, காவல் துறையினா் அதிக அளவில் அப்பகுதியில் குவிக்கப்பட்டனா். கணவர் அளித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் விரைவில் பிடிபடுவார் என்றும் என்றும் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உலக வங்கியின் அறிக்கையின்படி, உலகிலேயே சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1,50,000 பேர் சாலை விபத்துக்களால் இறக்கின்றனர்.
இதையும் படிக்க: ஆட்டோக்கள் மீது கார் மோதி விபத்து: பேருந்துக்காக காத்திருந்த இருவர் உயிரிழப்புSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.