டெல்லி: தனது பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் நாட்டு மக்களிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். சாதாரண குடும்பத்தில் பிறந்த எனக்கு நாட்டுக்கு சேவை புரிய வாய்ப்பு கிடைத்தது ஜனநாயக சிறப்பு என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.மேலும் இளைஞர்கள் தங்கள் சொந்த கிராமங்கள், படித்த பள்ளிகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். எவ்வித பேதமுமின்றி அனைவருக்கும் அடிப்படை வசதி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள் எனவும் 21-ம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்ற நாடு தயாராகி வருகிறது என்பதை உறுதியாக நம்புகிறேன் எனவும் அவர் கூறியுள்ளார். நமது டதேசத்தந்தை காந்தியின் பாணியில் போராட்டங்கள் நடத்த வேண்டும் எனவும் அரசியல் வேறுபாடுகளை கடந்து கட்சிகள் மக்களின் வளர்ச்சிக்காக ஒன்றிணைய வேண்டும் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார். மேலும் சுதந்திர போராட்டத்தில் மகாத்மா காந்தியின் பங்களிப்பு சிறப்பானது என அவர் கூறினார்.