தேனி- குச்சனூர் சனீஸ்வரர் கோயில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

​தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் கிராமத்தில் சுரபி நதிக்கரையில் ​சுயம்பு ஸ்ரீசனீஸ்வர பகவான் திருக்கோயில்​ ​அமைந்துள்ளது​.‌ இங்கு சுயம்பு மூர்த்தியாக, சாந்த சொரூபனாக காட்சியளிக்கும் குச்சனூர் சனீஸ்வர​​ பகவானை தரிசிப்பதற்காக, தேனி மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளி​ல் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

பூஜை

​இந்த ஆலயத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதத்தில் சனி வாரத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.‌ கொரோனா நோய் பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஆடித்திருவிழா, இந்த ஆண்டு நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதற்காகக் கோயில் பிராகாரத்தில் உள்ள கொடிமரத்துக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புனித நீரால் அபிஷேக​​ம் செய்யப்பட்டு, காக்கை உருவம் பதித்த கருநீல கொடி ஏற்றப்பட்டது.

சனீஸ்வரர்

அதனைத்தொடர்ந்து சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெற்றன. பக்தர்கள் எள் தீபம் ஏற்றியும், காகம் உருவம் பதித்த பொம்மைகள், பொறி உள்ளிட்டவைகளையும் படைத்து வழிபட்டனர்.

​இன்று தொடங்கிய ​​திருவிழா வருகின்ற ஆகஸ்ட் 13 – ம் தேதிவரை ஆடி மாதத்தில் உள்ள அனைத்து சனிக்கிழமைகளிலும் சிறப்பாக நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வா​க ​வருகின்ற ஆகஸ்ட் 5​ ​- ம் தேதியன்று​ ​மதியம் 12.30 மணிக்கு ​​நீலாதேவி – சனீஸ்வரர் திருக்கல்யாணம்​ ​நடைபெறும். நீலாதேவி போன்று கும்பம் தயார் செய்து அதற்கு சனீஸ்வரர் மங்கல நாண் பூட்டுவார். ​அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 6 – ம் தேதி மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்கார​த்துடன் பெருந்திருவிழா நடக்கும்.​ பின்னர் ஆகஸ்ட் 15 – ம் தேதி அங்குள்ள சோணைக் கருப்பண்ண சுவாமிக்கு கறி விருந்து, மது படையலுடன் திருவிழா நிறைவு பெறும்.‌

கொடியேற்றம்

​திருவிழாவிற்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வசதிக்காக தேனி, சின்னமனூர் பகுதியில் இருந்து ​தலா 5 ​சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் 200க்கும் மேற்பட்ட போலீஸார், தீயணைப்புத் துறையினர் மருத்துவக் குழுவினர் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.