பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பயங்கர துப்பாக்கிச்சூடு! மகளுக்காக வந்த முன்னாள் மேயருக்கு நேர்ந்த துயரம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், திடீரென நடந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸின் அடேனியோ டி மணிலா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். பசிலன் நகரத்தின் முன்னாள் மேயரான ரோஸ் பியூரிகே தனது மகள் பட்டம் பெறுவதை காண வந்திருந்தார்.

விழா நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். எதிர்பாராத விதமாக நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அவர்களில் முன்னாள் மேயர் ரோஸ் பியூரிகேவும் ஒருவர். உயிரிழந்த மற்ற இருவரில் ஒருவர் பியூரிகேயின் நிர்வாக உதவியாளர் மற்றும் ஒரு பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரி என பின்னர் பொலிசார் தெரிவித்தனர்.

மேலும், இந்த சம்பவத்தில் சிலர் படுகாயமடைந்தனர். குறிப்பாக பியூரிகேயின் மகள் காயமடைந்ததால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பயங்கர துப்பாக்கிச்சூடு! மகளுக்காக வந்த முன்னாள் மேயருக்கு நேர்ந்த துயரம் | Shocking Gun Shot In Philippines University

PC: AP

இந்த நிலையில், சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை பொலிசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். காவலில் வைக்கப்பட்டுள்ள அவரிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பயங்கர துப்பாக்கிச்சூடு! மகளுக்காக வந்த முன்னாள் மேயருக்கு நேர்ந்த துயரம் | Shocking Gun Shot In Philippines University

PC: AP Photo/Aaron Favila

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பயங்கர துப்பாக்கிச்சூடு! மகளுக்காக வந்த முன்னாள் மேயருக்கு நேர்ந்த துயரம் | Shocking Gun Shot In Philippines University

PC: EPA-EFE/ROLEX DELA PENA

இந்த சம்பவம் தொடர்பாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் கூறுகையில்,

‘இந்த படுகொலைகள் குறித்து முழுமையாகவும், விரைவாகவும் விசாரித்து சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம் என உறுதியளிக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.  

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பயங்கர துப்பாக்கிச்சூடு! மகளுக்காக வந்த முன்னாள் மேயருக்கு நேர்ந்த துயரம் | Shocking Gun Shot In Philippines University

score.ind.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.