விமான பயணிகள் லக்கேஜ் பேக் மிஸ் ஆகாமல் பயணம் செய்வது எப்படி?

விமான பயணங்களின் போது பலர் தங்களது லக்கேஜ் வரவில்லை என புகார் செய்வதை நாம் அவ்வப்போது செய்திகளாகக் கேள்விப் பட்டு இருப்போம் அல்லது அனுபவித்து இருப்போம்.

அமெரிக்காவில் சென்ற ஆண்டு 0.33 சதவீதம் வரை லக்கேஜ் பேக்குகள் பயணிகளுக்குத் தாமதமாகக் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு அதுவே 0.55 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இது பார்க்க குறைவாக இருந்தாலும், தவறாகச் சென்ற பேக் எண்ணிக்கை 2 லட்சம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? எனவே விமான பயணிகளின் போது லக்கேஜ் பேக் மிஸ் ஆகாமல் பயணம் செய்வது எப்படி என இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

அமெரிக்காவில் திரும்பும் இடமெல்லாம் ‘படேல் பிரதர்ஸ்’.. யார் இவர்கள்?

பழைய பயண பே டேக்குகளை நீக்குதல்

பழைய பயண பே டேக்குகளை நீக்குதல்

பலர் தாங்கள் எத்தனை பயணங்கள் செய்தாலும் அதில் ஒட்டப்படும் லக்கேஜ் டேக்குகளை நீக்குவதில்லை. அதனால் சில நேரங்களில் ஊழியர்கள் அது எங்கு செல்ல வேண்டும் என்ற தெரியாமல் குழப்பத்தில் மாற்றி அனுப்பிவிடுவார்கள். எனவே ஒவ்வொரு முறை பயணம் செய்து முடித்த உடன் அதில் ஒட்டப்பட்டுள்ள பேக் டேக்கை நீக்கிவிடுங்கள். அப்போது தான் அடுத்த பயணத்தின் போது லக்கேஜ் மிஸ் ஆகாது.

அளவுக்கு அதிகமாக எடையை நிரப்பாதீர்கள்

அளவுக்கு அதிகமாக எடையை நிரப்பாதீர்கள்

இந்தியர்கள் ஒரு பையில் 10 ஆடைகள் தான் வைக்க முடியும் என்றால் அதில் 20 வைத்து தினித்து விடுவார்கள். இப்படி அளவுக்கு அதிகமாக லக்கேஜ் பேக்கில் அது லக்கேஜ் பெல்ட்டில் இடையில் எங்காவது சிக்கிக்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. எனவே சரியான அளவில் மட்டும் பைகளை நிரப்புங்கள்.

சரியான வடிவம்
 

சரியான வடிவம்

டிசைன் டிசைனாக பேக்குகள் வாங்குவதில் பலர் ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் நிறைய ஸ்டிராப்புகளுடன் இருக்கும். இது போன்ற விமான பயணங்களின் போது சரியான வடிவத்தில் உள்ள லக்கேஜ் பேக் மட்டும் பயன்படுத்துவது சரியாக இருக்கும்.

பெயர் மற்றும் போன் எண்

பெயர் மற்றும் போன் எண்

எப்போதும் லக்கேஜ் பேக்கில் பெயர் மற்றும் போன் எண் உள்ளிட்ட விவரங்களை ஒரு டேக்கில் எழுதி கட்டி விடவும். அது வழி தவறி செல்லும் பைகளை திரும்பப் பெற பயன்படும்.

முதலில் செல்லுங்கள்

முதலில் செல்லுங்கள்

அதிக லக்கேஜ் உடன் பயணம் செல்லும் போது முதலில் செக்-இன் செய்வது நல்லது. அப்படி செய்யும் போது பின்னர் வரும் பேக்களுடன் கலந்து தவறிச் செல்ல வாய்ப்புகள் குறையும்.

விலை உயர்ந்த பொருட்கள்

விலை உயர்ந்த பொருட்கள்

லக்கேஜ் பேக்குகளில் விலை உயர்ந்த பொருட்களை எடுத்துச்செல்வதை தவிருங்கள். லக்கேஜ் மிஸ் ஆகும் போது விலை உயர்ந்த பொருட்கள் இருந்தால், அது திரும்பக் கிடைக்கும் வரை ஒரு பதற்றமாகவே இருக்கும்.

உடைகள்

உடைகள்

விமானத்தில் பயணம் செய்யும் போது எப்போதும் கூடுதலாக 2 செட் உடையை உங்கள் கேரி-ஆன் பேக்கில் எடுத்துச் செல்வது நல்லது. ஒருவேலை லக்கேஜ் பேக் தவறி வேறு இடம் சென்றாலும் அது திரும்பக் கிடைக்கும் வரை இவை உங்களுக்கு உதவும்.

செல்ப்-செக் இன்

செல்ப்-செக் இன்

விமான பயணத்தில் செல்ப்- செக் இன் செய்பவர்கள் தங்களது லக்கேஜ் பேக் ஹாண்டலில் டேக் இருக்கின்றனவா என்று சரிபார்த்துக்கொள்ளவும். இல்லை என்றால் உடனே உங்கள் விமான சேவை வழங்குநருடன் உதவியைக் கேட்டு பெறுவது நல்லது.

ஏர்-டேக்

ஏர்-டேக்

உங்கள் லக்கேஜ் பேக்கில் ஏர்-டேக் உள்ளிட்ட டிராக்கிங் சாதனங்கள் இருந்தால், நீங்களே உங்கள் பேக் எங்கு உள்ளது என்பதை டிராக் செய்து எளிதாக பார்த்துக்கொள்ள முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Important Tips To Avoid Losing Your Bag In Air Travel

Important Tips To Avoid Losing Your Bag In Air Travel | விமான பயணிகள் லக்கேஜ் பேக் மிஸ் ஆகாமல் பயணம் செய்வது எப்படி?

Story first published: Sunday, July 24, 2022, 18:07 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.