சென்னை: அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ்ஸுக்கு இடையே பதவி போட்டி நிலவும் சூழலில் 14 மாவட்ட செயலாளர்களை ஓ. பன்னீர்செல்லம் அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து ஓபிஎஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டக் செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் மாவட்டங்களுக்கு . இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
அவர்களின் விவரம்:
1. வெங்கட்ராமன் – கழக வர்த்தக அணிப் பிரிவுச் செயலாளா்
சென்னை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்.
2. தர்மர் – இராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளா்
2 கோபாலகிருஷ்ணன் – மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளா்
4, செல்வராஜ் – கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
5. கொளத்தூர் 0. கிருஷ்ணமூர்த்தி – வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர்.
6. பாபு,தென் சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர்.
7. அம்பிகாபதி – தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளா்.
8. ரமேஷ் – வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளா்
9. ராஜ்மோகன்- திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளா்
10. மகிழன்பன் – வட சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர்
11. அசோகன் – சிவங்கை மாவட்டக் கழகச் செயலாளா்
12. ரஞ்சித் குமார் – காஞ்சிபுரம் மாவட்டக் கழகச் செயலாளர்.
13. சிவலிங்கமுத்து – திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்.
14. கணபதி – தென்காசி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர். “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடர்ந்து நிர்வாகிகளை நீக்கியும், புதிய நிர்வாகிகளை அறிவித்தும் வருகிறன்றனர்