QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் விநியோகம்

வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குரிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றது. இறுதி இலக்கமான 3, 4, 5 ஆகிய இலக்கங்களைக் கொண்ட வாகனங்களுக்கு இன்று (24) எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.

இதேவேளை,  QR குறியீட்டு முறைமையின் பிரகாரம் 4,700ற்கு மேற்பட்ட வாகனங்களுக்கு நேற்று (23) எரிபொருள் விநியோகிக்கப்பட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.