TNPSC group 4 exam analysis today: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு இன்று (ஜூலை 24) நடைபெற்று முடிந்து உள்ள நிலையில், தேர்வு எப்படி இருந்தது, கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் அதிகமானோர் எழுதும் தேர்வு குரூப் 4 தேர்வு. தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் இந்த தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி, மற்றும் ஒரே ஒரு எழுத்து தேர்வு மட்டும் என்பதால், இந்த தேர்வுக்கு இளைஞர்களிடையே அதிக மவுசு இருந்து வருகிறது.
இதையும் படியுங்கள்: TNTET 2022: ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்வது எப்படி?
இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு நண்பகல் 12.30 மணிக்கு நிறைவடைந்தது. இந்த தேர்வில் 15%க்கும் அதிகமானோர் ஆப்செண்ட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்த குரூப் 4 தேர்வில் தமிழ் பாட வினாக்கள் எளிமையாக இருந்ததாகவும், பொது அறிவு பகுதி வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாகவும் சில தேர்வர்கள் தெரிவிக்கின்றனர். அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க நேரம் போதவில்லை என சில தேர்வர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கணிதப் பகுதியில் 25 வினாக்களில் ஒரு சில வினாக்களைத் தவிர அனைத்து வினாக்களும் எளிதாக இருந்தது. சில வினாக்கள் கணித அடிப்படை பண்புகளை நன்கு புரிந்தவர்கள் மட்டுமே விடையளிக்கும் வகையில் இருந்தது. அதாவது தேர்வர்களை குழப்பும் வகையில், ஆனால் எளிதாக இருந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
தமிழ் பகுதி எளிதாக இருந்தது. இந்த ஆண்டு தமிழ் கட்டாய பாடமாக மாற்றியுள்ளதால், இதற்கு முன்னர் வரை ஆங்கிலம் படித்தவர்களும் எளிதாக பதில் அளிக்கும் வகையில் தமிழ் எளிதாக கேட்கப்பட்டிருந்தது.
பொது அறிவு பகுதி சற்று கடினமாக இருந்தது. சில கேள்விகளுக்கு பதில் அளிக்க சற்று கடினமாக இருந்து. அதிக நேரம் தேவைப்பட்டது. சில கேள்விகளை நன்கு புரிந்த கொண்ட பின்னரே பதில் அளிக்கும் வகையில் இருந்தது. குரூப் 4 தேர்வின் தரம் உயர்ந்துள்ளது. நேரடியாக பதில் அளிக்கும் கேள்விகள் அதிகமாக இருந்தாலும், இந்த முறை புதிய முறையாக விடைகளை பார்த்து புரிந்துக் கொண்டப் பின்னரே விடையளிக்கும் வகையில் இருந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஒட்டுமொத்தமாக, தேர்வு ஆவரேஜ் ஆக இருந்ததாக தேர்வர்களும், நிபுணர்களும் கூறுகின்றனர்.