அலைபேசி திருட்டு ஹவாலா முறையில் விற்பனை| Dinamalar

மும்பை : மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள மன்குர்த் என்ற இடத்தில் சமீபத்தில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு 480 அலைபேசிகள், 9.5 கிலோ கஞ்சா, 174 பாட்டில்வெளிநாட்டு மதுபானங்கள், லேப்டாப்கள் உட்பட 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக ஆசிப் இட்ரிசி என்பவர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.இந்த கும்பல் அலைபேசி திருடர்களிடம் இருந்து போன்களை வாங்கி ஐ.எம்.இ.ஐ. எண்ணை மாற்றி அதை பல்வேறு மாநிலங்களில் மட்டுமின்றி நேபாளம் வங்கதேசத்திலும் விற்று வருகின்றனர். இதற்கானபணப்பரிமாற்றம் ஹவாலா முறையில் நடந்துஉள்ளது தெரியவந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.