புதுடெல்லி: தேர்தல் சீர்திருத்த நடைமுறை யின் ஒரு பகுதியாக, வாக்காளர் விவரத்துடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தை தேர்தல்ஆணையம் கொண்டு வந்தது.இதன் மூலம் போலி வாக்காளர்களையும் அகற்ற முடியும் எனமத்திய அரசு கூறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், இந்த சட்டம் குடிமக்களாக இல்லாதவர்களையும் ஓட்டுப் போட வழிவகுக்கும் என கூறுகின்றன.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில், இந்தசட்ட மசோதாவில் உள்ள குறைகள் குறித்து விவாதம் நடத்தாமல்,24 மணி நேரத்துக்குள் இருஅவைகளிலும் நிறைவேற்றப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கூறுகையில், ‘‘ஆதார் இருப்பிட சான்று, குடியுரிமை சான்று அல்ல. வாக்காளரிடம் ஆதார் அட்டையை கேட்டால், அதுஇருப்பிட சான்றாகத்தான் இருக்கும். இதன் மூலம் குடிமக்கள் அல்லாதவர்களுக்கும் நீங்கள் ஓட்டுரிமை அளிக்கிறர்கள்’’ என்றார்.
தனிநபர் அந்தரங்க உரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், வாக்காளர் அடை யாள அட்டையுடன், ஆதார் எண் இணைப்பது விருப்பத்துடன் கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூவும், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாளத்துடன் இணைப்பது விருப்பத்துடன் கூடியது என தெரிவித்துள்ளார். இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.