இந்தியாவின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ புதிதாகச் சந்தையில் வர இருக்கும் ஆகாச ஏர்லையன்ஸ் மற்றும் வேகமாக விரிவாக்க பணிகளில் ஈடுபட்டு இருக்கும் டாடா குழுமத்தின் ஏர் இந்தியா-வை எப்படிச் சமாளிப்பது எனப் போராடி வரும் நிலையில், அடுத்தடுத்து உயர்மட்ட நிர்வாகத்தில் மாற்றங்களையும் எதிர்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் இன்டிகோ ராகுல் பாட்டியா ஒரு விமானப் பயணத்தில் செய்த செயல் தான் தற்போது இந்தியா முழுவதும் பாராட்டப்பட்டு வருகிறது. இது என்ன போட்டோ..? ஏன் பார்லேஜி பிஸ்கட் டிரென்டிங் ஆகிறது..?
எஸ்பிஐ வங்கி-யை துரத்தும் HDFC.. இனி அரசு வங்கிகளின் ஆதிக்கம் குறையுமா..?
சிறு வயது விருப்பம்
எல்லாருக்குள்ளும் ஒரு சிறுபிள்ளைத்தனம் அல்லது சிறு வயது விருப்பம் பெரியவர்கள் ஆனாலும் விடாது. உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால் கடலை மிட்டாய், தேன் மிட்டாய், போன்றவற்றை இன்று தேடித் தேடி சாப்பிடுவார்களைப் பார்த்தால் சிறியவர்களை விடப் பெரியவர்கள் தான் அதிகம்.
ராகுல் பாட்டியா
அந்த வகையில் ரூ.36000 கோடி சொத்து வைத்திருக்கும் இன்டிகோ ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான ராகுல் பாட்டியா தனது சொந்த விமானத்தில் அதாவது இண்டிகோ விமானத்தில் செல்லும் போது எதைப்பற்றியும் யோசிக்காமல், யாரைப் பற்றியும் கண்டுகொள்ள முடியாமல் செயல் புகைப்படமாய்த் தற்போது இந்தியா முழுவதும் வைரலாகி வருகிறது.
இண்டிகோ விமானம்
பெங்களூரில் இருந்து டெல்லி-க்கு சென்ற இண்டிகோ விமானத்தில் இன்டிகோ ஏர்லையன்ஸ் நிறுவனர் ராகுல் பாட்டியா பிஸ்னஸ் கிளாஸ் சீட்டில் உக்காரமல் சக பயணிகள் உட்காரும் சீட்டில் உட்கார்ந்துகொண்டு டீ-யில் பார்லே-ஜி பிஸ்கட் தொட்டு ஜாலியாகச் சாப்பிட்டு உள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகியுள்ளது.
டீ பார்லே-ஜி பிஸ்கட்
இதைப் பார்க்கும் போது இந்திய விமானச் சந்தையில் 57 சதவீத வர்த்தகச் சந்தையைப் பெற ரிச்சார்ட் பிரான்சன் போலவோ அல்லது விஜய் மல்லையா போல ஆடம்பர வாழ்க்கையை வாழத்தேவையில்லை. எளிமையான வாழ்க்கையை வாழவும் முடியும் என இப்புகைப்படத்தை எடுத்த YP ராஜேஷ் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
13F சீட்
இதேபோல் பலர் இன்டிகோ ராகுல் பாட்டியா அமர்ந்திருந்த 13F சீட் குறித்தும், எக்சிட் சீட் குறித்தும் பல கருத்துக்களைப் பதிவிட்டனர். இதில் முக்கியமாக விமானத்தில் அவருக்கு எக்ஸ்ட்ரா லெக் ஸ்பேஸ் கூடக் கொடுக்கப்படவில்லை என விமர்சனம் செய்த நிலையில் சிலர் எக்சிட் சீட்டில் தான் அதிகப்படியான கேப் இருக்கும் எனவும் விளக்கம் கொடுத்துள்ளனர்.
Parle G: ஒரு நாளுக்கு எத்தனை பிஸ்கட் தயாரிக்கிறது தெரியுமா..? அடேங்கப்பா..!
IndiGo MD Rahul Bhatia having ParleG biscuit & tea in BLR-DEL flight
IndiGo MD Rahul Bhatia having ParleG biscuit & tea in BLR-DEL flight இன்டிகோ ராகுல் பாட்டியா: ரூ.36000 கோடி சொத்து இருக்கு, ஆனா பார்லே-ஜி தான் பேவரைட்..!