சென்னை: புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தலாம் என ஈபிஎஸ்சுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யவும் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு ஆர்எஸ் பாரதி தொடர்ந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.