இலங்கையில் இருந்து தப்பி சிங்கப்பூரில் வசிக்கும் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவிற்கு சிக்கல்கள் அதிகரிக்கலாம். இலங்கையின் முன்னாள் அதிபரை கைது செய்யுமாறு தென்னாபிரிக்க மனித உரிமைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமைகள் அமைப்பு சிங்கப்பூரில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இலங்கையில் பல தசாப்தங்களாக விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போரில் ராஜபக்சேவின் பங்கு குறித்து, அந்த நேரத்தில் ராஜபக்சே நடத்திய அடக்கு முறை காரணமாக போர்க் குற்றவாளியாக கருத வேண்டும் எனவும், அவரை கைது செய்ய வேண்டும் என கோரியுள்ளது. அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு முன்பும், உள்நாட்டுப் போரின் போது இலங்கை ராணுவம் மற்றும் ராஜபக்சேவின் பங்கு குறித்து பல சர்வதேச அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன.
உள்நாட்டுப் போரின் போது ராஜபக்சேவின் பங்கு
இலங்கையின் சிங்கள பௌத்த பெரும்பான்மையினர் அண்மைக்காலம் வரை கோட்டாபய ராஜபக்ஷேவை ஒரு போர் வீரனாகவே கருதினர். தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அதன் தலைவர் பிரபாகரனை ஒழிப்பதில் ராஜபக்சேவின் பங்கு மனித உரிமை மீறய செயல் என சிலரால் குற்றம் சாட்டப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவின் சர்வதேச உண்மை மற்றும் நீதித் அமைப்பின் (ITJP) வழக்கறிஞர்கள் சிங்கப்பூர் அட்டர்னி ஜெனரலிடம் குற்றவியல் புகாரை தாக்கல் செய்துள்ளனர். 73 வயதான ராஜபக்சே போர்க்குற்றத்திற்காக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. அவரை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று அந்த அமைப்பு கோரியுள்ளது.
ஒரு காலத்தில் போர் வீரனாக கருதப்பட்ராஜபக்சே
கோத்தபய ராஜபக்ச ஒரு காலத்தில் இலங்கையில் ‘போர் வீரனாக’ கருதப்பட்டார். இவருடைய தலைமையில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு ஒழிக்கப்பட்டது. இலங்கையில் ஏறத்தாழ 30 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததால். இலங்கையின் சிங்கள சமூகம் ராஜபக்சேவை ஹீரோவாக மதித்தனர்.
ராணுவப் பின்னணியில் இருந்து இலங்கையின் அதிபராக பதவியேற்கும் முதல் நபர்
கோத்தபய ராஜபக்ச இலங்கை இராணுவத்தின் தலைவராக இருந்துள்ளார். அவர் இந்தியாவில் இராணுவப் பயிற்சி எடுத்துள்ளார். 1980ல், அசாமில் உள்ள ‘கவுன்டர் இன்சர்ஜன்ஸி மற்றும் ஜங்கிள் வார்ஃபேர் ஸ்கூலில்’ பயிற்சி பெற்றார். ராணுவப் பின்னணியில் இருந்து இலங்கையின் அதிபராக பதவியேற்கும் முதல் நபர் இவர்தான். இலங்கை அரசியலில் ராஜபக்சே குடும்பம் நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பிரதமராக இருந்துள்ளார்.
போர் குற்றம் என்றால் என்ன
போர்க்குற்றங்கள் (war crime) தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையினால் தெளிவான வரையறை வழங்கப்பட்டுள்ளது. இதன் கீழ், யுத்தம் மற்றும் நெருக்கடியான காலங்களில் ஒரு நபரின் கண்ணியம் மற்றும் உரிமைகள் மீறப்படுவதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு செய்வது போர்க்குற்றத்தின் கீழ் வரும். மேலும் மனித உரிமையை மீறுபவர்கள் போர்க்குற்றவாளிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
மேலும் படிக்க | கொந்தளிப்பில் இலங்கை; தமிழகத்திற்கு அகதிகளாக வரும் ஈழத் தமிழர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ