ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் மது விற்பனை செய்வதை தடுப்பதற்காக சட்டம்-ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு பிரிவு காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல் துறையினர், கனிராவுத்தர் குளம் அருகே தீவிர சோதனை மேற்கொண்டதில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்த அஸ்லாம் என்ற வாலிபரை கைது செய்துள்ளனர்.
மேலும் அவர் வைத்திருந்த 6 மாது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதேபோல் திங்களூர் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில், நிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்த குமார்(48) என்பவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் குட்டபாளையதில் மது விற்பனை செய்த பாஸ்கரன்(42) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 9 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.