அமெரிக்கப் பொருளாதாரத்துடன் போட்டிப்போட்டு வரும் சீனா தற்போது ரியல் எஸ்டேட் துறையின் வீழ்ச்சியால் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.
ஒருபக்கம் மக்களின் எதிர்ப்பும், போராட்டமும் பெரு பிரச்சனையாக வெடித்திருக்கும் நிலையில் மறுபுறம் ரியல் எஸ்டேட் துறையின் வீழ்ச்சியால் சீனாவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் மோசமாக நிலையை எதிர்கொண்டு இருக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்த எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ள சீன ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
சீனா-வின் ரியல் எஸ்டேட் வீழ்ச்சி.. உலக நாடுகளுக்கு எச்சரிக்கை மணி..!
சீனா
சீனாவில் ரியல் எஸ்டேட் துறையின் வீழ்ச்சியால் வீட்டுக் கடன் வாங்கிய மக்கள் ஈஎம்ஐ செலுத்த முடியாது என அறிவித்துள்ள நிலையில், சுமார் 50 நகரங்களில் 150க்கும் அதிகமான கட்டுமான திட்டங்கள் அனைத்தும் முடங்கியுள்ளது. ஏற்கனவே ரியல் எஸ்டேட் துறைக்கான நிதி உதவிகளைச் சீன அரசு கட்டுப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரியல் எஸ்டேட் துறை
இந்தப் பிரச்சனையை உடனடியாகச் சமாளிக்கும் விதமாகச் சீன அரசு அந்நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் டெவலப்பர்களுக்கு நிதியுதவி அளித்துக் கட்டுமான பணிகளை முடிக்க உதவும் வகையில் சுமார் 300 பில்லியன் யுவான் அதாவது 44 பில்லியன் டாலர் மதிப்பிலான தொகையை இத்துறை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.
நிதியுதவி
இந்த நிதியுதவி தற்போது சீனாவின் எவர்கிராண்டே குரூப் முதல் 12க்கும் அதிகமான முக்கிய நிறுவனங்களுக்கு அளிக்கப்பட உள்ளதாக REDD நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த 300 பில்லியன் யுவான் தொகையில் 50 பில்லியன் யுவான் சீன கட்டுமான வங்கியில் இருந்தும், 30 பில்லியன் யுவான் தொகை சீன மக்கள் வங்கியிடம் இருந்து பெறப்பட்டு உள்ளது.
குடிசை பகுதி
இதேபோல் சீனாவில் இருக்கும் குடிசை பகுதிகளை மேம்படுத்தும் திட்டத்தை முக்கியமானதாகக் கையில் எடுத்துள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்த சிறப்புப் பத்திரங்களை வெளியிட்டு அதன் மூலம் நிதிதிரட்டும முயற்சியை அந்நாட்டு திட்டமிட்டு வருகிறது.
ரியல் எஸ்டேட் வீழ்ச்சி
சீனாவின் ரியல் எஸ்டேட் வீழ்ச்சி சீனாவுக்கும் மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கும் பாதிப்பு உள்ளது. உதாரணமாகச் சீனாவின் ரயில் எஸ்டேட் துறை வீழ்ச்சி அடைந்தால் அந்நாட்டின் நிதியியல் சந்தை கடுமையாகப் பாதிக்கப்படும். இது கட்டாயம் உற்பத்தி, சேவை துறைகள் பாதிக்கும். ஏற்கனவே சீனாவில் உற்பத்தி குறைத்த காரணத்தால் உலக நாடுகளில் விலைவாசி அதிகரித்துள்ளது.
China govt setup 300 billion yuan fund for troubled real estate sector
China govt setup 300 billion yuan fund for troubled real estate sector சீனா-வின் திடீர் அறிவிப்பு.. 300 பில்லியன் டாலர் ஒதுக்கீடு.. பிழைக்குமா ரியல் எஸ்டேட்..!