ஆடி மாசம் தொடங்கியதிலிருந்து மக்கள் விசேஷ நாட்கள் இல்லாமல் வாடிப்போய் இருக்கின்றனர். ஆதலால் மக்களின் நாட்களை நிறைவு செய்யும் விதமாக சென்னையில் வரிசையாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கிறது.
இம்மாத இறுதியில் அய்யனார் ஆடிப்பெருக்கு விழாவைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் அற்புதமான ஸ்டாண்ட்-அப், கலைக் கண்காட்சி போன்ற பல நிகழ்ச்சிகள் சென்னை மக்களின் நாட்களை உற்சாகப்படுத்த தயாராக உள்ளது.
இரண்டு இசை ஜாம்பவான்களின் மந்திரம்:
‘காதல் ரோஜாவே’ என்ற மெல்லிசைப் பாடலில் இருந்து ‘காதலிக்கும் பெண்ணின் கைகள்’ வரை பல்லாயிரம் பாடல்களை பாடி மக்களின் மனதில் இருக்கும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து பல்வேறு காலத்தால் அழியாத பாடல்களை மக்களுக்கு கொடுத்துள்ளனர்.
அப்படிப்பட்ட பாடகரான எஸ்.பி.பி.யின் மகன் எஸ்.பி.பி. சரண், வருகின்ற ஜூலை 31 அன்று மாலை 6.15 மணி முதல் சென்னையில் உள்ள வாணி மஹாலில் நடக்கவிருக்கும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.
அழுத்தத்தை மறந்து சிரிப்பதற்கு:
மெட்ராஸ் காமெடி சர்க்யூட் வழங்கும், பிரவீன் குமார், சொக்கலிங்கம், சுந்தர், குணா கண்ணன் மற்றும் மனோஜ்குமார் போன்ற நகைச்சுவை நடிகர்களைக் கொண்ட ஸ்டண்ட்-அப் நிகழ்ச்சி ஜூலை 30-ம் தேதி மாலை 6 மணி முதல் அடையாறில் நடைபெறவுள்ளது.
பெசன்ட் நகரில் ஸ்டாண்ட்-அப் காமெடி ஷோ:
காமிக்ஸ்தான் தமிழ்ப் புகழ் யோகேஷ், அக்யுப் ஜலீல், நவ்நீத் மற்றும் ரபீந்தர் கண்ணன் போன்ற ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை காமிக்-கான் 3.0 என்ற தலைப்பில் நிகழ்ச்சி அரங்கேற்றபோகிறார்கள். இந்நிகழ்ச்சி ஜூலை 31 அன்று மாலை 4 மணி முதல் பெசன்ட் நகர், பர்கர்மேனில் நடைபெறும்.
கலை கண்காட்சி:
வாழும் அருங்காட்சியகம் என்று அழைக்கப்படும் தட்சிணசித்ராவில் உள்ள காதம்பரி கலைக்கூடத்தில், சென்னையைச் சேர்ந்த ஓவியர் விஷாகா மெனியா தனது ஓவியங்களை காட்சிப்படுத்தியுள்ளார். ‘சீ த்ரூ மீ’ என்ற ஓவியக் கண்காட்சி ஜூலை 31ஆம் தேதி, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
தட்சிணசித்ரா அருங்காட்சியகத்தில் மற்றொரு நிகழ்ச்சியான அய்யனார் ஆடிப்பெருக்கு விழா, ஜூலை 28 முதல் 31 வரை நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழக விவசாயிகள் அடுத்த விவசாயப் பருவத்திற்கான நீர்த்தேக்கங்களின் உயர்வை வரவேற்கும் விதமாக ‘மோட மேளம்’ (தாளம்) மற்றும் ‘முளைப்பாரி’ (நவதானம் அல்லது ஒன்பது தானியங்களை முளைப்பது) போன்ற சடங்குகளை செய்யவிருக்கிறார்கள்.
மேலும் பார்வையாளர்களுக்காக, பாரம்பரிய கைவினைஞர்களும் ஸ்டால்களை அமைப்பார்கள். இதைத்தொடர்ந்து, ஜூலை 29 முதல் 31 வரை பாரம்பரிய தம்மம்பட்டி மர வேலைப்பாடு பட்டறை நடக்கவுள்ளது.