இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல், இன்போசிஸ் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிலையில் இன்று நாட்டின் 5வது பெரிய ஐடி சேவை நிறுவனமான டெக் மஹிந்திரா தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல், இன்போசிஸ் ஆகியவை வருவாய் மற்றும் லாபத்தில் கணிசமான வளர்ச்சியை மட்டுமே அடைந்து சந்தை கணிப்புகளை எட்டாத காரணத்தால் அதிகப்படியான வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில் மஹிந்திரா குழுமத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் டெக் மஹிந்திரா லாபத்தில் சரிவை சந்தித்துள்ளது.
டெக் மஹிந்திரா
டெக் மஹிந்திரா (டெக்எம்) திங்களன்று வெளியிட்ட ஜூன் காலாண்டு முடிவுகளில் லாபத்தின் அளவு சரிந்துள்ளது. கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் பதிவான ரூ. 1,353.20 கோடியுடன் ஒப்பிடுகையில், ஜூன் 2022 காலாண்டில் இந்நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.1,132 கோடியாக மட்டுமே உள்ளது. இதன் மூலம் வருடாந்திர அடிப்படையில் லாபத்தின் அளவு 16.4 சதவீதம் சரிந்துள்ளது.
வருவாய்
மேலும் கடந்த ஆண்டின் இதே ஜூன் காலாண்டில் ரூ.10,197.60 கோடியாக இருந்த வருவாய் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான ஜூன் 30 உடன் காலாண்டில் 24.6 சதவீதம் அதிகரித்து ரூ.12,708 கோடியை வருவாயாகப் பெற்றுள்ளது.
டாலர் வருவாய்
மேலும் ஜூன் காலாண்டில் டெக் மஹிந்திராவின் டாலர் வருவாய் $1,632 மில்லியனாக உள்ளது. இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் 1.5 சதவீதம் அதிகம். இதேபோல் கடந்த ஆண்டு ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் 18 சதவீதம் அதிகம். மேலும் நிலையான நாணய அடிப்படையில், டெக் மஹிந்திராவின் வருவாய் வளர்ச்சி காலாண்டு அடிப்படையில் 3.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
புதிய வர்த்தகம்
ஜூன் காலாண்டில் டெக் மஹிந்திரா புதிதாக 803 மில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது. இது மார்ச் காலாண்டில் 1,011 மில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தைப் பெற்றது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 815 மில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தைப் பெற்றது.
அட்ரிஷன் விகிதம்
டெக் மஹிந்திரா நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் மார்ச் காலாண்டில் 24 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால் கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் இதன் அளவு 17 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் EBIT மார்ஜின் அளவு 11 சதவீதமாக உள்ளது.
Tech Mahindra Q1 Results Profit fall 16 percent; revenue up 25 percent; Check attrition rate
Tech Mahindra Q1 Results Profit fall 16 percent; revenue up 25 percent; Check attrition rate டெக் மஹிந்திரா லாபம் சரிவு.. ஆனா ஒரு சர்ப்ரைஸ்..!