பழங்குடியின பெண் ஜனாதிபதியானால் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய சொன்னாரா அம்பேத்கர்? #FactCheck

`பழங்குடியின பெண்னொருவர் ஜனாதிபதியாகின்ற நாளில் (நாட்டின் முதல் குடிமகள் எனும் உயர் பதவியை அடைவது), நாட்டில் இடஒதுக்கீடு வழிமுறையை ரத்து செய்யலாம்’ என அம்பேத்கர் தெரிவித்ததாக சிலர் சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்தோம்.
image
நாட்டின் முதல் குடிமகளான திரெளபதி முர்முவுக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து பாரம்பரிய முறைப்படி ஊர்வலமாக சென்று பதவியேற்ற அவர், 21 குண்டுகள் முழங்க பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், நாட்டு மக்களிடையே அவர் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “குடியரசுத் தலைவராக பதவியேற்றது பெருமையளிக்கிறது. என்னை தேர்ந்தெடுத்த எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களுக்கு நன்றி. நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி. நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்திற்காக பணியாற்றுவேன். அடுத்த 25 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டம் தயாராகும் நேரத்தில் சேவையாற்ற வாய்ப்பு கிடைத்தது பாக்கியம். சாதாரண கவுன்சிலராக தொடங்கி குடியரசுத் தலைவராக உயர்ந்தது ஜனநாயகத்தின் தாயகமான இந்தியாவின் மகத்துவம்” எனப் பேசியிருந்தார்.

இந்த நேரத்தில் முன்பொருமுறை அம்பேத்கர் சொல்லியதாக சில கருத்துகள் இணையத்தில் பதிவாகி வருகின்றன. குறிப்பாக `என்றைக்கு பழங்குடியின பெண்னொருவர் ஜனாதிபதியாகின்றாரோ, அன்றைக்கு நம் நாட்டில் இடஒதுக்கீடு வழிமுறையை ஒழித்துவிடலாம்’ என்று அம்பேத்கர் கூறியிருப்பதாக ட்விட்டரில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உண்மையில் அம்பேத்கர் இப்படி கருத்து தெரிவித்தாரா என்பதை ஆராய்ந்தோம்.
image
சொல்லப்படும் கருத்து – பழங்குடியினப் பெண் இந்தியாவின் ஜனாதிபதியாக (உயர்ந்த பதவி) பொறுப்பேற்கும் நாளில், நாட்டில் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட வேண்டும்.
உண்மைத்தன்மை – இதை அம்பேத்கர் சொன்னதற்கான எந்த ஆதாரமும் டிஜிட்டல் வடிவில் இல்லை. அவர் இதுவரை மேற்கொண்ட அரசியலமைப்பு விவாதங்களிலோ, புத்தகத்திலோ குறிப்பிடவில்லை. ஆகவே இந்தக் கருத்து போலியானது.
இதுதொடர்பாக இணையத்தில் ஆராய்ந்தபோதும், அம்பேத்கர் இதுதொடர்பாக சொன்னதுகுறித்து எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. சாதி ஒழிப்பு தொடர்பாக அம்பேத்கர் எழுதிய ‘Annihilation of Caste’ உள்ளிட்ட புத்தகங்களிலும், வெளியறவுத்துறை தளங்களிலும், லோக் சபா-வின் இணையத்திலும் (1, 2, 3, 4) எந்தவித ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி: FactlySource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.