இன்று முதல் திங்கள் செவ்வாய் வியாழக்கிழமைகளில் பாடசாலையை திறப்பதற்கு கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு இணங்க அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின்றன.
புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (Online) நிகழ்நிலை மூலம் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாகாண கல்வி பணிப்பாளர்கள் வலய கல்வி பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு கல்வி அமைச்சினால் சுற்று நிறுபம் வெளியிடப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு நான்கு தினங்களுக்கு ஒரு தடவை 40 லிட்டர் எரிபொருளை இலங்கை போக்குவரத்து சபையினால் வழங்குவதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் க. கருணாகரன் விசேட ஏற்பாடுகளை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,