தற்போது டெங்கு அதிக அபாயகரமான தொற்றுநோய் நிலையை எட்டியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக இன்று (25) விசேட டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இம்மாதத்தில் இதுவரையிலும், 8900 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும், இந்த வருடத்தில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 43000 ஆகும்.
மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் ஐம்பது வீதமான (50%) டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஜூலை மாதத்தில், கொழும்பு, யாழ்ப்பாணம், களுத்துறை, கண்டி, காலி, குருநாகல், இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய எட்டு மாவட்டங்களில் 80 வீதமான (80%) டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.