புதுடெல்லி: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஜோஷி இரானி (18). இவர் கோவாவில் நடத்தும் ஓட்டலில் உள்ள மதுபான விடுதிக்கு இறந்தவரின் பெயரில் உரிமம் பெறப்பட்டுள்ளதாகவும், இதனால் ஸ்மிருதி இரானியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் பவன் கேரா, ஜெய்ராம் ரமேஷ் மற்றும் நேட்டா டிசோஷா ஆகியோர் குற்றம் சாட்டியிருந்தனர்.
இதையடுத்து தன் மீதும், தனது மகள் மீதும் ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி அவதூறு ஏற்படுத்தியதாக அவர்களுக்கு ஸ்மிருதி இரானி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ‘‘மதுபான விடுதி நடத்த அல்லது எந்த தொழில் செய்யவோ ஜோஷி இரானி விண்ணப்பிக்கவில்லை. எங்களை களங்கப்படுத்தும் நோக்கில் தனிப்பட்ட தாக்குத லில் ஈடுபட்டுள்ளீர்கள். அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.