இன்றைய காலகட்டத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்களை பாலியல் தொந்தரவு தரும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இதுபோன்று பாலியல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், மாணவியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு சேலம் பதிவாளர் கோபி கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கு, பதிவாளர் கோபி பாலியல் தொல்லை தந்ததாக ஆராய்ச்சி மாணவி அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.