Twitter user data on sale: ட்விட்டர் தளம், உலகளவில் உள்ள கோடிக்கணக்கிலான பயனர்கள், நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், தளத்தில் உள்ள பயனர் தரவுகள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தளத்தில் உள்ள ஒரு தீங்கிழைக்கும் பிழைகள் இந்த வேலைகளை செய்ததாகக் கூறப்படுகிறது. வெளியாகியுள்ள தகவல்களின்படி, கிட்டத்தட்ட 54 லட்சம் பயனர்களின் தனியுரிமைத் தகவல்கள் திருடப்பட்டு சுமார் 24 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.
மேலதிக செய்தி:
Spam Calls: ஒரே ஒரு செட்டிங்ஸ மாத்தினா போதும்; தேவையில்லாத அழைப்புகள தவிர்க்கலாம்!
ஜனவரி மாதம், HackerOne ட்விட்டரில் தீங்கிழைக்கும் பிழைகள் இருப்பதாக எச்சரிக்கை விடுத்தது. இந்த பிழைகளைப் பயன்படுத்தி, ட்விட்டர் பயனர்களின் கணக்கு விவரங்கள் எளிதில் திருடப்படலாம் என்றும் அறிவித்திருந்தது.
இந்த தகவல்களில், மொபைல் எண், மின்னஞ்சல், முகவரி, ட்விட்டர் ஐடி ஆகியவை அடங்கும் என்று கூறப்படுகிறது. இதில் முக்கியமாக விஷயம் என்னவென்றால், கணக்கில் அதிகபடியான பாதுகாப்பு அம்சங்களை ஆக்டிவேட் செய்து வைத்திருந்தாலும், எளிதாக ஹேக்கர்களால் பயனர்களின் தனியுரிமைத் தகவல்களை அணுக முடியும் என்று கூறப்படுகிறது.
தவறுகளை சரிசெய்யுமா ட்விட்டர்
“தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு, எவரது ட்விட்டர் தகவல்களையும் எந்த அங்கீகாரமும் இல்லாமல், ஹேக் செய்ய அனுமதிக்கிறது. ட்விட்டரின் ஆண்ட்ராய்டு கிளையண்டில் பயன்படுத்தப்படும் அங்கீகார செயல்முறையில் பிழை உள்ளது. குறிப்பாக ட்விட்டர் கணக்கின் நகலைச் சரிபார்க்கும் செயல்முறைகளில் இந்த பிழைகள் காணப்படுகிறது,” என்று ட்விட்டரில் “zhirinovksiy” என்ற பெயருடைய நபர் பதிவிட்டுள்ளார்.
மேலதிக செய்தி:
Tatkal ticket: வீட்டில் இருந்தபடியே தட்கல் ரயில் டிக்கெட்! இப்போது எளிதாக புக் பண்ணலாம்!
முன்னதாக இதே போல் சிக்கல் எழுந்தபோது, “இது கண்காணிக்க வேண்டிய பாதுகாப்பு பிரச்சினை” என்று ட்விட்டர் ஒப்புக்கொண்டது. அப்போது, இதனை ஆய்வுசெய்து கண்டறிந்தவருக்கும் $5,040, இந்திய மதிப்பில் சுமார் 4 லட்சம் ரூபாய் வெகுமதி அளித்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
மோசமான ஹேக்கர்
Restore Privacy அறிக்கையில், ட்விட்டர் ஹேக்கர், தளத்தின் தரவுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்கிறார் என்றும், “Devil” என்ற பயனர் பெயரின் இடுகை இன்னும் இயங்குதளத்தில் உள்ளது என்றும், வெளியான தரவுத்தொகுப்பில் பிரபலங்கள், நிறுவனங்கள் போன்றவை அடங்கும் என்றும் கூறியுள்ளது.
மேலதிக செய்தி:
ஜப்பான் நிறுவனம் Toshiba கொண்டுவந்துள்ள புதிய 4K QLED ஸ்மார்ட் டிவிக்கள்!
தீங்கிழைக்கும் ஹேக்கர், முதலில் சில மாதிரி தரவுகளை பொதுவெளியில் விற்பனைக்காகக் கொண்டுவந்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ட்விட்டர் நிர்வாக இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயனர்கள் கூறிவருகின்றனர். எனினும், இதுகுறித்த எந்த அறிவிப்பை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.