அவர் விலையுயர்ந்த உடையும் காலணிகளும் அணிகிறார்… பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் மீது நேரடி தாக்குதல்


தாங்கள் பிரித்தானியாவின் பிரதமரானால் நாட்டுக்கு என்ன செய்வோம் என்று சொல்லி வாக்கு கோருவார்கள் பிரதமர் வேட்பாளர்கள்.

ஆனால், தற்போது பிரித்தானிய பிரதமர் தேர்தலில் போட்டியிடும் ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ்சுக்கிடையில் தனிப்பட்ட சண்டை நடப்பது போல் தெரிகிறது.

ஆம், போரிஸ் ஜான்சனின் ஆதரவாளரும் லிஸ் ட்ரஸ்சை ஆதரிப்பவருமான கலாச்சார செயலரான Nadine Dorries, நாடு பொருளாதார சிக்கலில் இருக்கும்போது ரிஷி சுனக் விலையுயர்ந்த உடையும் காலணிகளும் அணிவதாக நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். ரிஷி 3,500 பவுண்டுகள் மதிப்புடைய சூட்டும், 450 பவுண்டுகள் மதிப்புடைய ஷூக்களும் அணிவதாகவும், ஆனால், லிஸ் ட்ரஸ் வெறும் 4.50 பவுண்டுகள் மதிப்புடைய காதணிகள் அணிந்து பயணிப்பதாகவும் Dorries குற்றம் சாட்டியுள்ளார்.

Dorriesஇன் கூற்று சில கன்சர்வேட்டிவ் கட்சியினரை கோபமடையச் செய்துள்ளது. நாம் எல்லாரும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது, இப்படிப்பட்ட தனிப்பட்ட தாக்குதல்களுக்கு அடுத்த பொதுத்தேர்தலில் தண்டனை கிடைக்கும் என்கிறார்கள் அவர்கள்.

அவர் விலையுயர்ந்த உடையும் காலணிகளும் அணிகிறார்... பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் மீது நேரடி தாக்குதல் | He Wears Expensive Clothes And Shoes

Image – timesofindia

அடுத்த பொதுத்தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் உள்ளன என்பதை யாரும் மறந்துவிடவேண்டாம் என்று கூறும் கேபினட் அலுவலக அமைச்சரான Johnny Mercer, தலைமைக்காக இப்படி அடித்துக்கொள்வது அவமானத்துக்குரியது, நம் தரத்தை உயர்த்திக்கொள்வதற்கான நேரம் இது என்று ட்வீட் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ரிஷியின் தனிப்பட்ட சொத்துக்கள், மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகளும் ரிஷியின் மனைவியுமான அக்‌ஷதா மூர்த்தியின் தனிப்பட்ட சொத்துக்கள் குறித்த விடயங்கள், பிரித்தானிய பிரதமருக்கான போட்டியின்போது பலமுறை இழுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.