இந்த பங்கில் முதலீட்டை குறைத்த எல்ஐசி.. என்ன காரணம்?

சிறந்த பங்கு சந்தை முதலீட்டாளரான எல்ஐசி நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டில் பல பங்குகளில் முதலீட்டினை அதிகரித்துள்ளது. இது நல்ல விஷயம் தான் என்றாலும், சில பங்குகளில் முதலீட்டினை குறைத்துள்ளது. இது கவலையளிக்கும் விஷயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக பார்மா துறை சார்ந்த பங்கினில் முதலீட்டினை குறைத்துள்ளது.

அது எந்த நிறுவனம்? ஏன் இதில் குறைத்துள்ளது? இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

ஆட்டு பாலில் சோப்.. லட்சங்களில் வருமானம் ஈட்டும் ஈரோடு தம்பதிகள்..!

எவ்வளவு குறைப்பு?

எவ்வளவு குறைப்பு?

கடந்த சில அமர்வுகளாக எல்ஐசி மற்றும் சன் பார்மா பங்குகள் ஏற்ற இறக்கத்திலேயே காணப்படுகிறது.

இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பங்கு சந்தைக்கு அளித்த அறிக்கையில், எல்ஐசி தனது போர்ட்போலியோவில் இருந்து சன் பார்மா நிறுவனத்தில் உள்ள பங்கினில், கடந்த ஜூன் காலாண்டில் 16,85,66,486 பங்குகளில் இருந்து, 12,05,24,944 பங்குகளாக குறைத்துள்ளது. இது 7.026%ல் இருந்து 5.024% ஆக குறைத்துள்ளது.

சன் பார்மா பங்கு விலை?

சன் பார்மா பங்கு விலை?

இன்று சன் பார்மா பங்கின் விலை சற்று குறைந்து, 867.65 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 877.40 ரூபாயாகவும், இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 862 ரூபாயாக முடிவடைந்துள்ளது, இதன் 52 வார உச்ச விலை 967.05 ரூபாயாகும், இதே இதன் 52 குறைந்தபட்ச விலை 672.55 ரூபாயாகும்.

இதே பி எஸ் இ-ல் இப்பங்கின் விலை சற்று குறைந்து, 866.10 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 877.10 ரூபாயாகவும், இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 862 ரூபாயாக முடிவடைந்துள்ளது, இதன் இதன் 52 வார உச்ச விலை 966.90 ரூபாயாகும், இதே இதன் 52 குறைந்தபட்ச விலை 672.85 ரூபாயாகும்.

வாங்கிய பங்குகள்
 

வாங்கிய பங்குகள்

சன் பார்மா நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 4,32,724.72 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதற்கிடையில் இந்த மாதத்தில் எல்ஐசி குஜராத் நர்மதா வாலி ஃபெர்டிலைசர்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ், சீமென்ஸ், இக்ரா மற்றும் முகந்த் போன்ற பங்குகளில் முதலீட்டினை செய்துள்ளதாகவும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

ரெக்கார்டு டேட்

ரெக்கார்டு டேட்

இந்த மாத தொடக்கத்தில் எல்ஐசி பங்குதாரர்களுக்கு 2022ம் நிதியாண்டிற்கான டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 1.50 ரூபாயினை இந்த நிறுவனம் அறிவித்தது. இதன் முகமதிப்பு 10 ரூபாயாகும். இந்த நிறுவனம் ஆகஸ்ட் 26 அன்று ரெக்கார்டு டேட்டாக அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

LIC reduced 2% stake in Sun Pharma: do you have it?

LIC reduced 2% stake in Sun Pharma: do you have it?/இந்த பங்கில் முதலீட்டை குறைத்த எல்ஐசி.. என்ன காரணம்?

Story first published: Tuesday, July 26, 2022, 18:24 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.