இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் எரிபொருள் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தர முடியுமென்று நம்புவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மண்ணெண்ணெய் இல்லாததால் தொழில் செய்ய முடியாமல் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக தென் இலங்கையைச் சேர்ந்த சிறு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர் சங்கங்களின் தலைவர்கள் இன்று (26) கடற்றொழில் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர் , கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நன்றாக அறிந்துள்ளதாகவும் பல வழிகளில் கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றை விஷேட ஏற்பாட்டில் கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.