புதுடில்லி: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் போது காயம் ஏற்பட்டதால், நீரஜ் சோப்ரா காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என இந்திய ஒலிம்பிக் சங்கம் கூறியுள்ளது.
அமெரிக்காவில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் 18 வது சீசனில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இந்நிலையில், உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் பைனலின் போது நீரஜ் சோப்ராவிற்கு காயம் ஏற்பட்டதால், அவர் காமன்வெல்த் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
இது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கம் செயலாளர் ராஜீவ் மேதா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவில் இருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நீரஜ் சோப்ரா, உடல்நலக்குறைவு காரணமாக, காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்க இயலாது என்பதை தெரிவித்தார். பைனலின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. உலக தடகள சாம்பியன்ஷிப் முடிந்த உடன் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவர் ஒரு மாதம் ஓய்வெடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுரை செய்தனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement