குஜராத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் கள்ளச் சாராயம் குடித்த பலர் ஞாயிற்றுக்கிழமை நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தனர். கள்ளாச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 30 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கள்ளச் சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட 51 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். ரசாயன விஷத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாகக் குஜராத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை கள்ள மதுவை உட்கொண்டதாகக் கூறப்படும் பலர் நோய்வாய்ப்பட்டதால் இறந்தவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 30 ஆக உயர்ந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 51 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர், மாநில அரசாங்க அறிக்கை தெரிவித்துள்ளது.
மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, ஐஜிபி சுபாஷ் திரிவேதி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அறிவித்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி 3 நாட்களில் விரிவான அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார். அதே நேரத்தில், அகமதாபாத்தின் தண்டுகாவில் விபத்து மரணங்கள் என பதிவு செய்யப்பட்ட மேலும் ஐந்து வழக்குகள் விசாரணையில் உள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து 51 பேர் பாவ்நகர் மற்றும் அகமதாபாத் பொது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவு விஷத்தால் ஏற்பட்ட மொத்த இறப்புகளில், 6 பேர் அகமதாபாத்திலும், 22 பேர் பொடாட்டிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 2 மரணங்களுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
குஜராத்தில் உள்ள காந்திநகரில் உள்ள தடய அறிவியல் ஆய்வகம் பாதிக்கப்பட்டவர்கள் உட்கொண்ட பொருளைப் பகுப்பாய்வு செய்ததில் 98.71% மற்றும் 98.99% மெத்தில் ஆல்கஹால் இருப்பது தெரியவந்துள்ளது. இதுவரையிலான விசாரணையில், நச்சு இரசாயன ஸ்பைக்ட் திரவத்தை உட்கொண்டதால் மரணங்கள் ஏற்பட்டதாகத் தெரிகிறது என்று அரசாங்க அறிக்கை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு பயன்படுத்தக்கூடிய நச்சு பானத்திற்கு பொருத்தமான மாற்று மருந்தை வழங்குவது குறித்து மருத்துவர்கள் குழு தடய அறிவியல் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
குஜராத்தில் கள்ளச் சாராயம் குடித்து பலர் உயிரிழந்த விவகாரத்தில், முக்கிய குற்றவாளி உட்பட 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். போடாட் மாவட்டத்தின் பர்வாலா மற்றும் ரன்பூர் காவல் நிலையங்களில் தலா ஒன்று என இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பர்வாலாவில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்-இல், 14 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 302 (கொலை) மற்றும் 328 (குற்றம் செய்யும் நோக்கத்துடன் விஷம் வைத்து காயப்படுத்துதல்) மற்றும் குஜராத் மதுவிலக்குச் சட்டப் பிரிவு 67(1)(a) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரன்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது எப்.ஐ.ஆர்-இல், 11 பேர் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 302, 328 மற்றும் 120B (சதி) மற்றும் குஜராத் மதுவிலக்கு தடைச் சட்டப் பிரிவு 65A மற்றும் 67(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“தண்டுகா காவல்நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட ஐந்து விபத்து மரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த மரணங்களும் இரசாயன விஷத்தால் ஏற்பட்டவை என உறுதிசெய்யப்பட்டால், குற்றம் பதிவு செய்யப்படும்” என்று அரசாங்க செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த வழக்கை ஏ.டி.எஸ் மற்றும் அகமதாபாத் குற்றப்பிரிவு இணைந்து விசாரித்து வருகிறது. குஜராத்தில் மதுபானங்கள் உற்பத்தி, விற்பனை மற்றும் நுகர்வு ஆகியவற்றை தடை செய்யும் சட்டம் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”