பெங்களூரு ; பெங்களூரு கே.எஸ்.ஆர்., ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட நாட்டின் முதல் சுரங்க மீன் அருங்காட்சியம், ஓராண்டுக்கு பின் மூடப்பட்டுள்ளது.பெங்களூரு கே.எஸ்.ஆர்., ரயில் நிலையத்திற்கு வரும் பயணியர், பொழுது போக்க, எச்.என்.ஐ., அக்வாடிக் கிங்க்டம் உடன், இந்திய ரயில்வே நிலை வளர்ச்சி ஆணையம் இணைந்து, நாட்டின் முதல் 12 அடி நீள மீன் அருங்காட்சியகம், 2021 ஜூலையில் திறக்கப்பட்டது.
இங்குள்ள 120 வகையான மீன்கள், பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இதை நிர்வகிக்கும் பொறுப்பு, எச்.என்.ஐ., அக்வாடிக் கிங்க்டம்மிற்கு, மூன்று ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டது.ஆனால், இந்நிறுவனம் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல், அருங்காட்சியகத்தை மூடியுள்ளது. ரயில் நிலையத்திற்கு வரும் பயணியர், அருங்காட்சியகத்தை பார்க்க சென்றபோது, மூடப்பட்டுள்ள போர்டை பார்த்து ஏமாற்றம் அடைகின்றனர்.இது குறித்து, நிறுவன நிர்வாக பங்குதாரர் சையது அஹித் ஹசன் கூறியதாவது:
மீன் அருங்காட்சியகத்துக்கு எதிர்பார்த்த அளவில், மக்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. பெரும் இழப்பை சந்தித்தோம். ஆயினும், எந்த வருத்தமும் இல்லை. இது எங்களுக்கு ஒரு பெரிய கற்றல் அனுபவமாக இருந்தது.பையப்பனஹள்ளியில் புதிதாக திறக்கப்பட்ட நாட்டின், ‘ஏசி’ வசதி கொண்ட சர் எம் விஸ்வேஸ்வரய்யா முனைய நிலையத்திற்கு வார நாட்களில், 500 முதல் 600 பயணியரும்; வார இறுதி நாட்களில் 4,000 பயணியரும் வருகை தருவர் என எதிர்பார்க்கிறோம். எனவே, அங்கு உலகத் தரம் வாய்ந்ததாகவும்; விசாலமாகவும் மீன் அருங்காட்சியகம் அமைப்பது குறித்து யோசித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement