சீனாவிடம் கெஞ்சும் இலங்கை.. செவி சாய்க்குமா.. உதவிக்கரம் நீட்டுமா?

இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இந்த தருணத்தில், எந்த நாடேனும் உதவி செய்து விடாதா? என்ற பெருத்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றது.

சமீபத்தில் இந்தியா தவிர மற்ற நாடுகள் எதுவும் பெரியதாக உதவிக்கரம் நீட்டவில்லை என இலங்கை அரசு சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இந்தியா இலங்கைக்கு பல உதவிகளை செய்து வந்தாலும், அது இலங்கையினை மீட்டெடுக்க போததாகவே உள்ளது.

30 வருட தோல்வி, 51 வயதில் திருப்பம்.. மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கும் மீனாட்சி அம்மாள்!

உதவி வேண்டும்

இதற்கிடையில் இலங்கை அரசு தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்திடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது. இது பெரியளவில் கைகொடுக்குமா? அதுவும் தற்போதைக்கு கைகொடுக்குமா? என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. இதற்கிடையில் இலங்கை சீனாவின் உதவியினை எதிர்பார்ப்பதாகவும், இதற்காக சீனா அரசிடம் உதவி கேட்டுள்ளது.

அவசர உதவி

அவசர உதவி

குறிப்பாக வணிக ரீதியாகவும், முதலீடு மற்றும் சுற்றுலா துறையினை மேம்படுத்தவும் உதவி செய்ய கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சீனாவிற்கான இலங்கை தூதர் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா த்துறைக்கு உதவ சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தற்போது சீனாவின் நிலவி வரும் நெருக்கடியான நிலையில் இருந்து மீள, உடனடியாக, குறிப்பாக பொருளாதார நெருக்கடியான நிலைக்கு மத்தியில் 4 பில்லியன் டாலர் அவசர உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மோசமான பொருளாதார நெருக்கடி
 

மோசமான பொருளாதார நெருக்கடி

22 மில்லியன் மக்களை கொண்ட இந்த தீவு நாட்டில், 1948 சுதந்திரத்திற்கு பிறகு, அன்னிய செலவானி என்பது மிக மோசமான சரிவினைக் கண்டுள்ளது. இதன் காரணமாக இங்கு மோசமான பொருளாதார நெருக்கடியானது நிலவி வருகின்றது. குறிப்பாக அத்தியாவசிய தேவைகளான உணவு, எரிபொருள், மருந்து பொருட்கள் என பலவும் இன்று நெருக்கடியில் உள்ளன. இதன் காரணமாக பல போராட்டங்களும் வெடித்துள்ளது. பொருளாதார நெருக்கடியானது அரசியல் நெருக்கடியாகவும் உருவெடுத்துள்ளது.

சீன நிறுவனங்கள் அதிகம் வாங்கணும்

சீன நிறுவனங்கள் அதிகம் வாங்கணும்

ஏற்கனவே இலங்கையின் மொத்த வெளி நாட்டுக் கடனில் 10% சீனாவிடம் தான் வாங்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பெய்ஜிங்கின் உதவியினை இலங்கை நாடியுள்ளது.

மேலும் இலங்கையின் பிளாக் டீ, சபையர், மசாலா மற்றும் ஆடைகள் அதிகளவில் சீனா நிறுவனங்கள் அதிகம் வாங்க சீன கூற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. சீன இறக்குமதி விதிகளை வெளிப்படையானதாகவும், விதிகளில் இலங்கைக்காக தளர்த்தவும் வேண்டும் என சீனத் தூதுவர் கூறியுள்ளார்.

முதலீட்டினை அதிகரிக்கணும்

முதலீட்டினை அதிகரிக்கணும்

மேலும் சீன நிறுவனங்கள் இலங்கையில் தங்களது முதலீடுகளை அதிகரிக்க வேண்டும், அதன் மூலம் இலங்கையினை வளர்ச்சியினை ஊக்குவிக்க சீனா உதவி செய்ய வேண்டும் என கூறியுள்ளது. கொரோனா காரணமாக சீனா முதலீட்டு திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. ஆக இது விரைந்து அதிகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

சுற்றுலா பயணிகள் வருகை சரிவு

சுற்றுலா பயணிகள் வருகை சரிவு

கடந்த 2018ல் சீனாவின் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 2,65,000 பேராக இருந்தது. ஆனால் 2019 தற்கொலை படை தாக்குதல் மற்றும் கொரோனா காரணமாக தற்போது முற்றிலும் வீழ்ச்சியடைந்து விட்டது. தற்போது இலங்கை அதனை மீண்டும் மீள்ச்சி காண வைக்க விரும்புகிறது.

இலங்கை பிரதமரின் சீனா திட்டம்

இலங்கை பிரதமரின் சீனா திட்டம்

மேலும் இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட முக்கிய துறைகளில் சீனாவின் ஒத்துழைப்புக்காக சீனா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமர் அல்ல, ஏற்கனவே ஜி ஜின்பிங் பிரதமராக இருந்தபோது, சீனா சென்று பேச்சு வார்த்தை நடத்தியவர் என்றும் கொஹொனா தெரிவித்துள்ளார்.

4 பில்லியன் டாலர் உதவி

4 பில்லியன் டாலர் உதவி

எனினும் தற்போது உலகளாவிய அளவில் நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியில் சீனாவும் நிதி ரீதியாக உதவுவதில், விரைவாக செயல்படுவது கடினமாக உள்ளதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

எனினும் இலங்கை சீனாவுடன் 4 பில்லியன் டாலர் உதவிக்கு பல மாதங்களாக பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது. இது விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு ஆதரவு உண்டு

இலங்கைக்கு ஆதரவு உண்டு

இதனை ஆதரிக்கும் விதமாக கடந்த வாரம் இலங்கைக்கு தனது முழு ஆதரவினையும் சீனா வழங்கும் என்றும் தெரிவித்தது. இதற்கிடையில் கடனுக்கு அப்பால் எரிபொருள், உணவு பொருட்கள், மருந்துவ பொருட்கள் என அவசர கால உதவியாக வழங்க உதவி செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Sri Lanka crisis: Sri Lanka asks China for help with trade and investment, tourism

Sri Lanka crisis: Sri Lanka asks China for help with trade and investment, tourism/சீனாவிடம் கொஞ்சும் இலங்கை.. செவி சாய்க்குமா.. உதவிக்கரம் நீட்டுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.