சென்னை: சென்னையில் நாளை செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் நடைபெறவுள்ள நிலையில், ஒரு சில சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது.
செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது. நாளை மாலை 4 மணி முதல் 9 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மாநிலக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இருந்து ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம் வரை ஜோதி ஓட்டம் நடைபெறவுள்ளது.
இதன்படி மாநிலக் கல்லூரி மைதானத்திலிருந்துத் துவங்கி காமராஜர் சாலை, ராஜாஜி சாலை கொடிமரச் சாலை, அண்ணா சாலை, பல்லவன் சாலை, சென்ட்ரல் சதுக்கம், ஈவெரா சாலை, ராஜா முத்தையா சாலை வழியாக நேரு உள் விளையாட்டரங்கம் ஜோதி ஓட்டம் நடைபெறுகிறது.
எனவே, மேற்கண்ட வழித்தடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் தங்கள் பயணத் திட்டத்தினை அதற்கேற்ப வடிவமைத்துக்கொள்ள வேண்டும் என்றும், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரத் திட்டமிட்டுள்ளவர்களும் சற்று முன்பாகவே பயண நேரத்தினை திட்டமிட்டு கொள்ள வேண்டும் என்று சென்னை காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.