டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் கைதுசெய்யப்பட்டனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பண மோசடி வழக்கில் ஆஜராக அமலாக்கத்துறை தரப்பில் அழைப்பாணை (சம்மன்) அனுப்பப்பட்டது.
இந்த அழைப்பாணையை ஏற்று சோனியா காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று (ஜூலை 26) ஆஜரானார். அப்போது அமலாக்கத்துறை தரப்பில் சோனியா காந்திக்கு விடுக்கப்பட்ட சம்மனுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் எம்.பி.க்கள் ராகுல் காந்தி தலைமையில் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரண்டாவது முறையாக ஆஜராகியுளளார்.
இது தொடர்பாக ஏற்கனவே ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து, இரண்டாவது முறையாக சோனியா காந்தி விசாரிக்கப்பட்டுள்ளார்.
அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகளை சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இயக்குநர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் முறைகேடு நடந்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.